ரஜினி படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கப் போகும் யுவன் சங்கர் ராஜா!

slider சினிமா

இளையராஜாவின் இசையில் ரஜினிகாந்த் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதுபோல கமல்ஹாசனும் இளையராஜாவின் இசையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராகி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது என்றாலும், இதுவரை ஒரு ரஜினி படத்துக்கோ, ஒரு கமல் படத்துக்கோ இசையமைத்தது இல்லை.

யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறகு வெகு காலம் கழித்து இசையமைப்பாளரான அனிருத்துக்குகூட ரஜினியின்  ‘தர்பார்’ படத்திற்கு இசையமைத்து விட்டார். கமலின்  ‘இந்தியன் 2’ படத்துக்கும் இசையமைக்கப் போகிறார்.

இப்படியான ஒரு வருத்தம் யுவனுக்கு மட்டுமல்ல, இளையராஜா குடும்பத்துக்கே இருந்து வந்ததாம். இந்த வருத்தம் இப்போது மகிழ்ச்சியாகும் நிலையை அடைந்திருக்கிறது. ஆம். ரஜினியின் அடுத்த படத்தையோ அல்லது அதற்கடுத்த படத்தையோ இயக்கவுள்ளார் சிறுத்தை சிவா. கிராமத்துப் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு இசையமைக்கப் போவது யுவன் சங்கர் ராஜாதான். இதில் இளையராஜா குடும்பத்துக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் ரொம்ப சந்தோஷமாம்.

 

பாகன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *