படப்பிடிப்புக்கு தயாராகும் ‘துப்பறிவாளன்-2’

slider சினிமா

தமிழ் சினிமாவில் ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக துப்பறியும் வகையில் வந்த படம் என்றால் அது இயக்குநர் மிஷ்கின் இயக்கிய  ‘துப்பறிவாளன்’ படம்தான் என்பது பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

இந்தப் படத்தை இப்பொழுதும் சேனல்களில் பார்க்கும் ரசிகர்கள் இது குறித்த தங்கள் கருத்தை சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ட்டாக போட்டு வருகிறார்கள். அவை பெரும்பாலும் அந்த படத்தின் சஸ்பென்ஸ் தன்மை மற்றும் படமாக்கப்பட்ட விதம் பற்றி பாராட்டும் முகமாகவே இருக்கிறது.  இவர்களில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப்படும் என்றும் பலர் கேட்டிருந்தார்கள்.

இதற்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது. ஆம், இயக்குநர் மிஷ்கின்  ‘துப்பறிவாளன் 2’ படத்தின் திரைக்கதையை முடித்துவிட்டு படப்பிடிப்புக்குத் தேவையான தளங்களைத் தேடி வருகிறார் என்று சில தினங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னா தனது ட்வீட்டரில் இதற்கான சில படங்களுடன் ஒரு பதிவு போட்டுள்ளார்.  ‘துப்பறிவாளன்’ படத்தில் நடிகர் பிரசன்னா நடித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் படத்தை விஷாலின் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இப்போது வரை விஷால், பிரசன்னா நடிப்பது உறுதியாகிவிருக்கிறதாம். மேற்கொண்டு நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய தகவல் எதிர்வரும் நாட்களில் வெளியாகுமாம்.

 

தென்னாடன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *