அ.தி.மு.க – பா.ஜ.க – ரஜினி – மு.க.அழகிரி – 2012 சட்டமன்றத் தேர்தல்

slider அரசியல்

தமிழகத்தில் வரும் 2021 -ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் தங்களது கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே டெல்லி பா.ஜ.க.வின் மெகா பிளான். இதற்காக ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்தும், அக்கட்சியில் மு.க. அழகிரிக்கு முக்கிய பங்கு இருக்குமாறு செய்தும், ஒரு பெரிய செல்வாக்கை உருவாக்கி முடிவில் அ.தி.மு.க. – பா.ஜ.க. – ரஜினி கட்சி என்கிற கூட்டணியோடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்திருக்கிறதாம் பாரதிய ஜனதா.

இதற்கு முக்கிய காரணம் கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ம.க. – தே.மு.தி.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்தும் எதுவும் தேறவில்லை. இதையடுத்து சமீபத்தில் தமிழகம் வந்தபோது அமித்ஷா தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜ.க.வினருக்கு சில முக்கிய அசைன்மெண்ட்டுகளை கொடுத்துள்ளாராம். அதில் ஒன்றுதான், தி.மு.க.வை பலவீனமடைச் செய்ய மு.க. அழகிரியை தங்கள் பக்கம் கொண்டுவரும் அதிரடி ஆபரேஷன். அ.தி.மு.க. துணையுடன் தமிழகத்தில் தாங்கள் ஆட்சி அமைக்கிறோமோ இல்லையோ தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளாராம் அமித்ஷா.

இது குறித்து தமிழக பா.ஜ.க. வட்டாரம் கூறுகையில், “அ.தி.மு.க. – பா.ஜ.க.- ரஜினி கட்சி – இதில் மு.க. அழகிரிக்கு ஏதோ ஒரு வகையில் முக்கிய பங்கு கொடுத்து அணைத்துக் கொள்வது மற்றும் இதன்மூலம் தி.மு.க.வை பலவீனம் செய்வதுதான் எங்களின் அடுத்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அசைன்மெண்ட். இதற்கு அழகிரி தரப்பில் முழு சம்மதம் தரப்பட்டுவிட்டது. இந்த வலுவான கூட்டணி நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும்’’ என்கிறார்கள்.

மு.க. அழகிரியை உள்ளிழுப்பது உள்ளிட்ட பா.ஜ.க.வின் இப்படியான அதிரடி திட்டம் குறித்து தி.மு.க. தலைமையும் அறிந்தே வைத்துள்ளது. இதனை முறியடிக்கும் புதிய வியூகங்களை அமைக்கத் தொடங்கிவிட்டோம் என்கிறார்கள் அறிவாலய வட்டார மூத்த நிர்வாகிகள்.

தமிழகத்தின் மேல் அமித்ஷாவின் முழு கவனம் இப்போது உள்ளதால், இனிவரும் நாள்களில் பல்வேறு அதிரடி அரசியல் நிகழ்வுகள் நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

தொ.ரா.ஸ்ரீ.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *