மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவரும் கீர்த்தி சுரேஷ்!

slider சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவுள்ள கீர்த்தி சுரேஷ், திடீரென்று இந்திப் படங்களில் மட்டுமே இனி நடிக்கப் போவதாகவும், தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கப் போவதில்லை என்கிற தகவல் ஒன்று வேகமாக பரவியது.

இந் நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழ் படமொன்றில் நடிக்கவுள்ள தகவல் உறுதியாகியிருக்கிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரொக்டஷன் நிறுவனத்தின் அடுத்த படத்தில்தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி, ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். மர்மங்கள் நிறைந்த உணர்வுபூர்வமான திரில்லர் படமாக எடுக்கப்படவிருக்கிறதாம். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *