சூர்யா, மாதவன் நடிப்பில் பெரும் திரில்லர் படம்! Reviewed by Momizat on . இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றியவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடுத்து கைதும் செய்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்து தன்மீ இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றியவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடுத்து கைதும் செய்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்து தன்மீ Rating: 0
You Are Here: Home » slider »  சூர்யா, மாதவன் நடிப்பில் பெரும் திரில்லர் படம்!

 சூர்யா, மாதவன் நடிப்பில் பெரும் திரில்லர் படம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணியாற்றியவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். இவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடுத்து கைதும் செய்தது. பின்னர் ஜாமீனில் வெளிவந்து தன்மீது போட்டப்பட்ட வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி, அது பொய் வழக்கு என்று நிரூபித்து நிரபராதியாக மீண்டவர் இந்த நம்பி நாராயணன். இவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம்தான் ’ராக்கெட்ரி: நம்பி விளைவு’!

இந்தப் படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தை மாதவனே இயக்கியும் வருகிறார். இப்படம் மூலம் மாதவன் இயக்குநராகியுள்ளார். ‘பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய படங்களுக்குப் பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

இப்போது நடிகர் சூர்யாவும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற தகவலும் கிடைத்திருக்கிறது. படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரம் தனது கதையை சூர்யாவிடம் கூறுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதிலிருந்து பிளாஷ்பேக் காட்சிகள் விரிவதாக உருவாகிறதாம். ஏற்கெனவே மணிரத்னம் இயக்கிய  ‘ஆயுத எழுத்து’ படத்தில் மாதவனும், சூர்யாவும் இணைந்து நடித்திருந்தனர்.

விஞ்ஞானம், சி.பி.ஐ. நீதிமன்றம், அதிரடி திருப்பங்கள் என்று பெரும் திரில்லர் படமாக வெளிவரவிருக்கிறது என்கிறது படக்குழு!

 

சிவகளை

About The Author

Number of Entries : 171

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top