இந்தியன் – 2 படத்தில் பாபி சிம்ஹாவை வில்லனாக்கும் ஷங்கர்!

slider சினிமா

‘இந்தியன் 2’ படத்தில் இதுவரை வில்லனாக பாலிவுட் பிரபலங்கள்  அஜய் தேவ்கான் நடிக்கவுள்ளார் என்றும், அக்‌ஷய் குமார் நடிக்கிறார் என்றும் செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார் என்கிற செய்தி வந்திருக்கிறது.

துவக்கத்திலேயே நிறைய பிரச்னைகளைச் சந்தித்து, படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு  ‘இந்தியன் -2’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்கவுள்ளது. கமல், காஜல் அகர்வாலை தொடர்ந்து  ‘கமிட்’டான ரகுல் பிரித்தி சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் பாபி சிம்ஹாவும் இணைந்துள்ளார்.

கமலின் அரசியல் வளர்ச்சியின் முக்கியமான காலகட்டத்தில் எடுக்கப்படும் மற்றும் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் நேட்டிவிட்டி நடிகர்கள் நடித்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று கமல் தரப்பிலிருந்து ஷங்கரிடம் சொல்லப்பட்டதாம். அதற்கு ஷங்கர் யோசித்தவகையில் பாபி சிம்ஹா பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவு செய்து, அதை கமலிடமும் சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டாராம்.

அப்படியென்றால் இனி தொடங்கும்  ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு எங்கும் பிரேக் ஆகாமல் செல்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது?!

 

தென்னாடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *