அந்தப் படத்தில் நிச்சயமாக நடிப்பேன் – வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த விஜய் சேதுபதி!

slider சினிமா

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும்  “800” என்ற  படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. முத்தையா முரளிதரன் இலங்கைத் தமிழர் என்ற போதும் சிங்களவர்க்கு ஆதரவானவர் என்பதால், இந்தப் படத்திற்கான எதிர்ப்புக் குரல் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலிருந்து கிளம்பியது.

இதையறிந்த விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிப்பது குறித்து யோசித்து வருவதாகவும், அனேகமாக நடிக்கமாட்டார் என்பதாகவும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வதந்திகள் வந்து கொண்டிருந்தன. இதற்கு இப்போது அதிகாரபூர்வமான முடிவு வந்துவிட்டது. அதுவும் சம்பந்தபட்ட விஜய் சேதுபதியிடமிருந்தே வந்திருக்கிறது.

கடந்த வாரம் மெல்போர்னில் நடைபெற்ற விருது விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, அங்கே இது சம்பந்தமான வேள்விக்கு பதிலளிக்கையில், ’’இப்படம் யாரையும் புண்படுத்தாத வகையில், முத்தையா முரளிதரன் என்கிற ஒரு தனிநபர் எப்படி ஒரு விளையாட்டு சாதனையாளர் உருவானார் என்பதை குறிவைத்து மட்டுமே எடுக்கப்படவுள்ளதால், இதில் நடிப்பது உறுதி’’ என்று தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

 

செபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *