அமைச்சர் மணிகண்டன் நீக்கம் – ஜெயலலிதா பாணியைக் கையிலெடுக்கும் எடப்பாடி பழனிசாமி Reviewed by Momizat on .   மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், சாதாரண அ.தி.மு.க. தொண்டனும் அமைச்சராக முடியும். அதுபோல   மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், சாதாரண அ.தி.மு.க. தொண்டனும் அமைச்சராக முடியும். அதுபோல Rating: 0
You Are Here: Home » slider » அமைச்சர் மணிகண்டன் நீக்கம் – ஜெயலலிதா பாணியைக் கையிலெடுக்கும் எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் மணிகண்டன் நீக்கம் – ஜெயலலிதா பாணியைக் கையிலெடுக்கும் எடப்பாடி பழனிசாமி

 

மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், சாதாரண அ.தி.மு.க. தொண்டனும் அமைச்சராக முடியும். அதுபோல ஓர் அமைச்சர் மீது ஏதேனும் புகார் எழுந்தால், அவர் அடுத்த வினாடியே நீக்கப்படுவதும் வழக்கம். 2016-ல் ஜெயலலிதா மறைந்தபிறகு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி இதுவரை எந்தவொரு காரணத்திற்காகவும் அமைச்சர்களை நீக்காமல் இருந்து வந்தார். இப்போது மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது மூலம் ஜெயலலிதா பாணியிலான துணிச்சலான நடவடிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நீக்கம் அ.தி.மு.க.வினரிடம் மட்டுமல்ல, தமிழக அரசியல் வட்டாரத்திடமும் ஆச்சர்யத்தை மட்டுமல்ல, பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அமைச்சர் மணிகண்டன் நீக்கம் குறித்து பல தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, கடந்த புதன் கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்து சக அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணன் பற்றி மணிகண்டன் பேசியதுதான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கோபம் கொள்ளச் செய்துள்ளது என்கிறார்கள். பொதுவாக, கேபினெட்டு அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால் அதனை முதல்வரிடம் சொல்லிதான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது சொல்லப்படாத அரசியல் மரபு. இதனை மீறி, வெளியில் அதுவும் பத்திரிகையாளரிடம் பேசுவது மரபு மீறிய செயலாகத்தான் கொள்ளப்படும். இதன் அடிப்படையில் தான் இந்த நீக்கம் நடைபெற்றுள்ளதாக முதல்வர் வட்டாரத் தகவல்களும் சொல்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் பதவி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்பது மணிகண்டன் பதவி வகித்த தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவர் பதவியை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கியதில் அமைச்சர் மணிகண்டன் கடும் அதிருப்தி அடைந்தாராம். இதுதான் நாளடைவில் முற்றி செய்தியாளர் சந்திப்பில் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது எனவும் தகவல்கள் வந்துக் கொண்டிருக்கிறது.

இதன் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மட்டுமில்லாமல், கட்சியின் சிறந்த, கட்டுக்கோப்பான நிர்வாகத் தலைவராகவும் மாறிக் கொண்டிருக்கிறார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், கட்சியை கட்டுகோப்பாக வைக்க இப்படியான முடிவுகள் தேவைப்படுகிறது என்றும் அ.தி.மு.க.வில் ஒருசாரார் சொல்கிறார்கள்.

தமிழக முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மெல்ல மெல்ல தனது தலைவியின் வழியில் நடைபோடத் தொடங்கியுள்ளார். இதன் பின்விளைவுகள் என்னவென்று இன்னும் சில நாள்களில் தெரிய வரலாம்.

விசாகன்

 

About The Author

Number of Entries : 171

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top