அஜீத்தின் ஜோடியாக ஸ்ரீதேவி மகள்? Reviewed by Momizat on .   அஜித் அடுத்து நடிக்கவுள்ள படம் அவருக்கு 60-வது படம். இந்தப் படம் தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்படவிருக்கிறது. அஜித்தின் ஃபேவரைட்டான ரேஸிங், சேஸிங், ஸ்போர்   அஜித் அடுத்து நடிக்கவுள்ள படம் அவருக்கு 60-வது படம். இந்தப் படம் தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்படவிருக்கிறது. அஜித்தின் ஃபேவரைட்டான ரேஸிங், சேஸிங், ஸ்போர் Rating: 0
You Are Here: Home » slider » அஜீத்தின் ஜோடியாக ஸ்ரீதேவி மகள்?

அஜீத்தின் ஜோடியாக ஸ்ரீதேவி மகள்?

 

அஜித் அடுத்து நடிக்கவுள்ள படம் அவருக்கு 60-வது படம். இந்தப் படம் தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்படவிருக்கிறது. அஜித்தின் ஃபேவரைட்டான ரேஸிங், சேஸிங், ஸ்போர்ட்ஸ் அம்சங்கள் பெரியளவில் இந்தப் படத்தில் இடம்பெறுகிறதாம். இவையோடு
ஆக்‌ஷன் திரில்லராகவும் எடுக்கப்படவிருக்கிறதாம்.

இவ்வளவு விஷயங்கள் ஓ.கே.? இந்த படத்துக்கு யார் இயக்குநர்? யார் தயாரிப்பாளர்? யார் ஹீரோயின்? என்கிற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இயக்குநர்  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய அதே ‘சதுரங்க வேட்டை’ வினோத் தான். தயாரிப்பாளரும்  ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்த அதே போனி கபூர்தான்.

கூடுதல் தகவலாக, இந்தப் படத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் மோதிய அருண் விஜய் தான் இந்த வில்லனாக நடிக்கிறார்.

புதிய படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போனி கபூர்-ஸ்ரீதேவி தம்பதியினரின் மகளான ஜான்வி கபூர் முதன் முதலில் தமிழில் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஆனால், அவர் அஜித்துக்கு ஹீரோயினாக நடிக்கிறாரா? என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்தப் படத்திற்கு இசையமைக்கப் போவது ஜிப்ரான்.

சில வருடங்களாக அஜித் தனக்கு ஓர் இயக்குநரை பிடித்துவிட்டால், அடுத்த படமும் அவர் இயக்கத்தில்தான் நடிக்கிறார். அப்படித்தான் சிறுத்தை சிவாவோடு  ‘வீரம், வேதாளம்’ என்று தொடர்ந்தார். அந்த குட்புக் வரிசையில் இப்போது இயக்குநர் வினோத் சேர்ந்துள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

 

தென்னாடன்

About The Author

Number of Entries : 171

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top