விஜய் நடிக்கும் 64வது படத்தின் ஹீரோயின் பாலிவுட் வில்லங்க நடிகையா?

slider சினிமா

அட்லீ இயக்கத்தில் விஜய்  நடித்துள்ள  ’பிகில்’ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதனையடுத்து விஜய் நடிக்கும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தெலுங்கு முன்னணி நடிகர்  அர்ஜுன் ரெட்டி நடித்து வெற்றி பெற்ற படத்தின் இந்தி ரீமேக்  ‘கபீர் சிங்’ படத்தில் சயீத் கபூருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இதே கியார அத்வானி நெட்பிளிக்ஸில் வெளியான  ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ல் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.      விஜய் – 64 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு  கதாநாயகியாக வரவுள்ள கியாரா அத்வானி மூலம் ஆரம்பத்திலே வில்லங்கம் அரங்கேறும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் தமிழ் திரையுலகினர். படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து துவங்கும் என்று கூறப்படுகிறது.

 

பாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *