சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை முடக்குமா உச்சநீதிமன்றம்?

slider அரசியல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்பு கொண்டுவரப்பட்டதுதான் சேலம் தொடங்கி சென்னை வரையிலான   8 வழிச்சாலை திட்டம். இது மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படவுள்ள இத் திட்டத்திற்காக ஏறக்குறைய 10,000 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையகப்படுத்த வேண்டும். இதனால் தங்கள் வேளாண் நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டதால், அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பொருட்டு போராட்டங்கள் மற்றும் சாலை மறியல்கள் நடைபெற்றன. இதனிடையே இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக பதிவாக, 8 வழிச்சாலை திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு  உச்சநீதிமன்றம் சென்றது. அங்கு விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை அளித்தும், தற்போதைய சூழ்நிலையில் நிலத்தை அளிக்கும் பணிகளுக்கு மட்டுமாவது அனுமதி வழங்குமாறும், சென்னை உயர்நீதிமன்ற தடையினை நீக்க வலியுறுத்தியும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்தது.

இந்த வழக்கில் ஆகஸ்ட் 7-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், தனது தீர்ப்பில்,  சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்துடன் 8 வழிச்சாலை வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவித்திருக்கிறது.

இந்த எட்டுவழிச் சாலைத் திட்டம் என்பது பா.ஜ.க. அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்று. இங்குள்ள பல எதிர்க் கட்சிகள் இதில் எதிர் நிலைப்பாடு கொண்டிருக்கின்றன. ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வும், கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் ஆதரித்து பேசிவரும் நிலையில், உச்சநீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இது முதல்கட்டம்தான், அடுத்த கட்டம் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளபடி ஆகஸ்ட் 22-ம் தேதி  தொடங்குகிறது. அதன் முடிவில் இந்த திட்டம் என்னவாகும் என்பது தெரியவரும். ஒருவேளை திட்டமே முடக்கப்பட்டால் அது அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் சற்று பின்னடைவாக அமையலாம்.

விசாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *