கோமாளி படத்தில் ஜெயம் ரவி

ரஜினியை கிண்டலடிக்கும் ‘கோமாளி’ – கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

slider சினிமா
கோமாளி படத்தில் ஜெயம் ரவி
ஜெயம் ரவி கோமாளி படத்தில்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம்   ‘கோமாளி’. இப் படத்தினை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் சமீபத்தில் நடைபெற்றது. இங்குதான் ஆரம்பித்தது இந்த படத்துக்கான முதல் பிரச்னை. இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ரஜினியின் அரசியல் பிரவேச பேச்சையும், இப்போதும் தொடரும் அரசியல் சூழலையும், ரஜினியோடு கிண்டல் செய்யும் விதமாக பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்களும், கண்டங்களும் எழுந்துள்ளன. இது குறித்து கமலும் பேசினார். இதன் பின்னர் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரஜினி குறித்த அந்த நகைச்சுவை காட்சி படத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனாலும், இதன் பிறகும் தொடர்கிறது இந்த படத்தில் ரஜினி சம்பந்தமான விவகாரம். இப் படத்தில் இடம்பெறு ‘ஒளியும் இலியும்’ பாடலில் ’’சூப்பர்ஸ்டாரு ஜோடியிலெல்லாம் பாட்டி ஆகிடுச்சு… இப்போ பேத்தியெல்லாம் வளர்ந்து வந்து ஜோடி ஆயிடுச்சு..’’ என்று இருக்கிறதாம். இதனால், ரஜினி ரசிகர்கள் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது ஏக கோபத்தில் உள்ளார்களாம்.

மேலும், இந்தப் படத்தின்  ‘கோமாளி’ என்னும் தலைப்புக்கேற்ப நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்கும்பட்சத்தில் இன்னும் என்னென்ன காட்சிகள் எல்லாம்  ரஜினியை கிண்டல் செய்யப்பட்டு எடுக்கப்படுள்ளதோ என்கிற பேச்சும் திரைத்துறையின் பல்வேறு மட்டங்களில் கிளம்பியிருக்கிறது. அனேகமாக இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள் இந்த விவகாரங்கள் பஞ்சாயத்து வரை செல்லும் என்றே தெரிகிறது.

 

பாகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *