பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளர்

சினிமா தொழிலை காப்பாற்ற வந்திருக்கும் புதிய தொழில் நுட்பம்

slider சினிமா
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளர்
பி.சி.ஸ்ரீராம்

 

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா துறையினரின் மிகப்பெரிய கவலையாகவும், நஷ்டத்தை விளைப்பதாகவும் இருந்து வருவது  ‘பைரஸி’ எனப்படும் திருட்டு சினிமா வணிகம். தமிழ் சினிமா தொழிலைப் பொருத்தமட்டில் இங்கு திருட்டு சினிமா வணிகத்தில் முன்னிலை வகிப்பது  ‘தமிழ் ராக்கர்ஸ்’ எனும் இணையதளம். சிறிய படம் பெரிய படம் என்றில்லாது எல்லா படங்களையும் சில மணி நேரத்தில் வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் வெளிடுவது, அல்லது படம் வெளிவருவற்கு முன்பே இணையதளத்தில் பதிவேற்றுவது போன்ற வேலைகளை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக  ‘தமிழ் ராக்கர்ஸ்’  செய்து வருகிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க தற்போது சீனா வழியாக வழிபிறந்திருக்கிறது என்கிற தகவல் தமிழ் சினிமா உலகை நிச்சயம் மகிழ்ச்சியை ஆழ்த்தும்.

இந்த பைரஸியை ஒழிக்க சீனா ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறது. இது அந்நாட்டில் உடனடியாக நடைமுறைக்கும் வந்துவிட்டது.  இது குறித்த செயல்முறை வீடியோவை பிரபல ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சீன தொழில்நுட்ப அறிஞர்கள், infrared என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பதை ஒழிக்க புதிய வழி கண்டுபிடித்துள்ளனர்.   இதில் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், நாம் கண்களால் திரையில் படத்தைப்  பார்க்கும்போது எந்த எழுத்துக்களும் திரையில் இருக்காது. ஆனால் திருட்டுத்தனமாக காமிராவில் ஷூட் செய்து அதாவது பைரஸியாக பதிவு செய்த பின்னர் அந்த வீடியோவை பார்க்கும்போது போது அதில் எழுத்துக்கள்  மற்றும் வாட்டர் மார்க், பைரஸி ப்ளாக்கர் என்று திரைமுழுவதும் தோன்றும்’’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் திருட்டுத்தனமாக யாரும் படம் பார்க்க முடியாது. இனி படம் பார்க்க தியேட்டருக்குதான் வந்தாக வேண்டும்.

சீனாவின் இந்த  பைரஸி ஒழிப்பு நடைமுறையை அரசாங்க ரீதியில் எந்த தாமதமின்றி இந்தியாவுக்குள்ளும் அனுமதிக்கும்பட்சத்தில் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கவலையும், நஷ்டமும் அகன்று தமிழ் சினிமாத் துறை பழைய வசந்த காலத்துக்கு திரும்பும்.

 

தென்னாடன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *