வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக பதவி உயர்வு பெறுகிறார் பரோட்டா சூரி!

slider சினிமா
வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக சூரி
vetrimaran – soori

 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களாக வலம் வந்த அத்தனை பேரும் சில படங்களில் ஹீரோ வேடம் போட்டதுண்டு. சில காமெடியன்கள்,  ‘இனிமேல் இப்படித்தான்’ என தங்களுக்குள்ளேயே சபதம் போட்டுக்கொண்டு,  “ஹீரோவாக மட்டுமே இனி நடிப்பேன்” என சொந்தக் முதலீட்டில் சூனியம் வைத்துக்கொண்டதும் உண்டு.

 

ஆனால், இந்த ஹீரோ அடையாளமே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தவர் நடிகர் சூரி. பலமுறை நகைச்சுவை பின்னணி கொண்ட கதையில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கதவை தட்டியபோதும் தவிர்த்தே வந்தார் சூரி. ஆனால், இந்தமுறை முன்புபோல தட்டவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை. காரணம், “என்னோட படத்துல ஹீரோவா நடிக்கறீங்களா?” எனக் கேட்டவர் இயக்குநர் வெற்றிமாறன்.

’ஆடுகளம்’ படத்துக்குபிறகு மதுரையை மையமாகக் கொண்ட இன்னொரு படம் எடுக்கவேண்டும் என்கிற உந்துதல் இயக்குநர் வெற்றிமாறனுக்குள் ஒரு லட்சியமாக இருந்து வந்திருக்கிறது. என்றாலும், அந்தப் படத்தை இயக்குவதற்கான சரியான சந்தர்ப்பமும், சூழலும் இப்போதைக்குதான் அமைந்திருக்கிறதாம். மதுரையில் வசிக்கிற சராசரி இளைஞனின் வாழ்வியலை சொல்கிற கதைக் களம் என்பதால், சூரி இந்தப் படத்தில் நடித்தால், மிகப் பொருத்தமாக இருக்கும் என்றெண்ணி, சூரியை அணுகியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்குநர் என்பதால், சூரியும் ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

 

இப்போதைக்கு வெற்றிமாறன் ’அசுரன்’ படத்தில் பிசியாக இருந்து வருகிறார். இதை முடித்துவிட்டு  ‘வடசென்னை-2’  ஆரம்பிக்கவுள்ளார். இங்குதான் சின்ன ட்விஸ்ட்.   ‘வடசென்னை—2’க்கு முன்பாக, சூரி ஹீரோவாக நடிக்ககவுள்ள இந்தப் படத்தை இயக்கப்போகிறாராம் வெற்றிமாறன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *