இயக்குநர் கௌதம் மேனன் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட்டது ஏன்?

slider சினிமா

 

நடிகர் தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்கிற படத்தையும், நடிகர் விக்ரமை வைத்து ’துருவநட்சத்திரம்’ என்கிற படத்தையும் இயக்குநர் கௌதம்மேனன் எடுத்து முடித்தார். ஆனால், இந்த இரு படங்களும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. பட்ஜெட் அதிகமானதால் ஏற்பட்ட பணப் பிரச்னையால்தான் இப்படங்கள் வெளியாகாமல் உள்ளன என்கிற தகவல்களும் உண்டு.

இந்நிலையில், கௌதம்மேனன் சில வருடங்களுக்கு முன்பு விஜய்யை வைத்து எடுப்பதாக இருந்த  ‘யோகன் அத்தியாயம் ஒன்று’ மீண்டும் தொடங்கவுள்ளதாம். ஆனால், ஹீரோ விஜய் இல்லை. இதில் ’வனமகன்’ படத்தில் நடித்திருந்த நடிகர் வருண் நடிக்கிறாராம். இவர் ஐசரி கணேஷுக்கு சொந்தக்காரர். இந்தப் படத்தின் தயாரிப்புக்கான உதவியும், கிடப்பில் கிடக்கும் இரு படங்களை வெளிகொண்டுவரும் முயற்சிக்கு உதவிகரமாகவும் ஐசரி கணேஷ் இருப்பார் என்கிற அடிப்படையில், மீண்டும்  ‘யோகம் அத்தியாயம் ஒன்று’ படத்தை கௌதமமேனன் தொடங்கியிருப்பதாக கோலிவுட் கிசுகிசுக்கிறது.

 

பாலமுருகன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *