டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் – வீட்டு உபயோக குறிப்புகள்

உலகம்
டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்

எம்ப்ராய்டரி செய்த துணிகளை, கையில் துவைத்தால் டிசைன்கள் கெட்டுப்போகாமலும், நூல் பிரிந்து விடாமலும் இருக்கும்.

வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கப் போடும்போது, வெள்ளைத் துணிகளை தனியாகவும், வண்ணத் துணிகளை தனியாகவும்தான் போட வேண்டும்.

சிலர் துணிகளுக்கு நீலம், கஞ்சி போடுவதற்காக, அவற்றையும் சேர்த்து மெஷினுள் போட்டு விடுகிறார்கள். இப்படிச் செய்வதால் கஞ்சித் தூள் மெஷினின் பக்கங்களில் மெல்லியதாகப் படிந்து, நாளடைவில் இருகி மெஷினே கெட்டுவிடுகிறது.

மெஷின்தானே என்று சிலர் சோப்புத்தூளின் அளவை மிகக் குறைவாகவும், தரக்குறைவான சோப்புத் தூளையும் மெஷினில் போட்டுத் துவைக்கிறார்கள். இப்படிச் செய்வதால் வெள்ளைத் துணிகள் பழுப்பாக மாறிவிடும். எனவே, சோப்புத் தூளின் தரம், அளவு இரண்டும் முக்கியம்.

அதிக அழுக்கான துணி, பிரயாணத்தில் அணிந்த துணிகளை ஒருமுறை வெறும் தண்ணீரில் அலசி எடுத்துவிட்டு, அதன் பிறகு மெஷினில் போட்டால் அழுக்கு நன்றாக நீங்கும்.

குழந்தைகளின் ஸாக்ஸ் வெள்ளை யூனிபார்மை ஒரு பக்கெட் வெது வெதுப்பான நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறுடன் 10 நிமிடம் ஊறவைத்து, பிறகு மெஷினில் போட்டால் பளிச்சிடும் வெண்மையாகும்.

சில சமயம் மிக்ஸ் மேட்ச் செய்யும் உடைகள் இரண்டு நிறமாக இருக்கும். அதில் ஒரு நிறம் சாயம் போகும். எனவே, அம்மாதிரியான துணிகளை முதலில் சிறிது நீரில் நனைத்து பார்த்துவிட்டு பிறகு (சாயம் போகாமலிருந்தால்) மெஷினில் போடலாம்.

ஊருக்கு எடுத்துச் செல்லும் அயர்ன் செய்த துணிகளின் மடிப்பு கலையாதிருக்க, இடையிடையே பேப்பர் வைத்தால் மடிப்பு நிற்கும்.

குர்தாவில் தற்காலிகமாக போடும் பட்டன்களை ஞாபகமாக எடுத்துவிட்டு, அதன் பிறகு துவைத்தால் பட்டன் நீடித்து புதிதாகவே இருக்கும்.

வீட்டில் ஒரு சிறு பிளாஸ்டிக் கவரில் இரண்டு பட்டன்கள், நூல், ஹீக், நாடா, ஊசி, ஸேஃப்டிபின், ஹேர்பின்களை தனியே எடுத்து வைப்பது சமயத்துக்கு உதவும்.

கருநீலம், கருப்பு துணிகளுக்கு கஞ்சி போடும்போது, நீலம் கலந்து போட்டால் வெள்ளை வெள்ளையாகப் படிவதைத் தடுக்கலாம்.

துணிகளை அயர்ன் செய்யும் போது சிறிது நீரில் சென்ட் ஒரு துளி கலந்து, துணி மீது தெளித்து, அதன்பிறகு அயர்ன் செய்தால் வாசனையாக இருக்கும். துணிகளை அடுக்கி வைக்கும் அலமாரி முழுவதும் இந்த மணம் பரவியிருக்கும்.

டீத்தூள் வைக்கும் டப்பாவில் ஏலக்காய் தோல் போட்டு வைத்தால், டீ குடிக்கும்போது ஏலக்காய் டீ போல இருக்கும்.

பெருங்காயத்தை வாங்கியதும் சிறு துண்டுகளாக கிள்ளி வைத்து ஏதாவது பருப்பு டப்பாவில் போட்டு வைத்து விட்டு, நான்கு நாள் கழித்து எடுத்தால் மொறுமொறுவென்றிருக்கும். இதை மிக்சியில் சீக்கிரமாக தூள் செய்யலாம். கடையில் வாங்கும் காயத்தை விட இது மணம் கூடுதலாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *