சூரியகதிர் இதழில் வெளிவந்த சுஹாசினி பதில்கள்

உலகம்
சுஹாசினி
சுஹாசினி

 

சிவனடியாள் தேவி, கல்லிடைக்குறிச்சி.
ஃபேஸ்புக்கில் சாருஹாசன் சார் ஸ்டேட்டஸ் எல்லாம் செம கலக்கலாக இருக்கிறதே! வீட்டிலும் இப்படித்தான் அவர் கலகலப்புடன் இருப்பாரே? அப்பப்பா எவ்வளவு விஷயங்கள் தெரிந்துவைத்திருக்கிறார் அவர்?
‘‘அப்பா ஒரு மிழிதிளிஸிவிகிஜிமிளிழி களஞ்சியம். கல்லூரியில் விரிவுரையாளராக வேண்டியவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனார். பின்பு நடித்தார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியிலும் புலமை. இயக்குநர் கே.பி. சொல்வார், ‘‘இரண்டு உலகம் உண்டு. முதல் உலகம் நாம் வசிப்பது. இரண்டாவது உன் அப்பா சாருஹாஸனுக்கு மட்டுமே உரித்தானது’’. இதைத்தான் அறிஞர்கள் பொஹிமியா (ஙிளிபிமிவிமிகி) என்றார்களோ! எனக்கு பொஹிமியா போகும் ஆசை இன்னும் வரவில்லை. அப்பாவின் பொஹிமியாவில் ஒரு மாநிலம்தான் அவர் ஃபேஸ்புக் பக்கம்!.

இளங்கோவன், வந்தவாசி.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே?
‘‘ம்ஹீம்… இப்போதுதான் ஓட்டு போட்டு விட்டு வந்தேன். எங்கள் மைலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.ராஜலட்சுமி. ஆனால், பாராளுமன்றத் தொகுதியில் 20க்கும் மேற்பட்ட வேட்பாளரில் ஒரு பெண் கூட இல்லை என்பது ஏமாற்றம். பயமா, தயக்கமா? நான் சொல்வது பெண்களுக்கு அல்ல.. மற்றவர்களுக்கு பயமா? தயக்கமா?’’

சுப்புலட்சுமி, திருவண்ணாமலை.
என் மகளின் வயது 29. அவள் 65 கிலோ எடை இருக்கிறாள். உடல் எடையை குறைக்கச் சொன்னால், மாட்டேன் என்கிறாள்.. ஒரு தீர்வு சொல்லுங்களேன்?
‘‘65 அதிக எடை இல்லை. பயப்பட வேண்டாம். 10 கிலோ குறைக்க முயலுங்கள். (1) 3 வேளை நன்றாகச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு 5 வேளை சிறிது சிறிதாக சாப்பிடுங்கள். (2) உப்பை பாதியாகக் குறையுங்கள். (3) வெள்ளை நிறத்தில் தோன்றும் உணவு வகைகளை ஒரு மாதம் நிறுத்துங்கள். அரிசி சாதம், இட்லி, தோசை, பால், வெண்ணை, சர்க்கரை (தயிர் வேண்டும்) நெய், பனீர், சீஸ் எல்லாம் விட்டு, கோதுமை, ராகி, பருப்புகள் பாஜ்ரா, காய்கறி சாப்பிடுங்கள். (4) காலை எழுந்ததும் அரை டம்பளர் வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பிழிந்து நாளைத் துவக்குங்கள். (5)தினமும் 40 நிமிடம் உடற்பயிற்சி ஒரு மாதத்தில் 5 கிலோ குறையும்.’’

பார்வதி, மதுரை.
ராஜாவின் சங்கீதத் திருவிழாவிற்காக எங்கள் மதுரைக்கு வந்திருந்தீர்கள். ஷீட்டிங், விழா என்று இதுவரை நிறைய தடவை நீங்கள் எங்கள் ஊர் வந்திருக்கலாம் மதுரையில் மறக்க முடியாத விஷயமாக எதைச் சொல்வீர்கள்?
‘‘மதுரையில் வாழ்ந்தவள், மதுரையில் படித்தவள் நான். சொக்கி குளம் வெங்கட்ராமன் தெருவில் மாடி போர்ஷனில் வசித்தோம். 5 பெண்கள், அம்மா, அக்கா நந்தினி, தங்கை பாஷினி, நான், தோழி அஞ்சனா. நான் தான் மதுரையில் வழிகாட்டி. உறவினர் வந்தால் பஸ் ஸ்டாண்டில் இருந்து சொக்கி குளம் கூட்டி வருவேன். 1975 ம் வருடம் மதுரையில் தண்ணீர் பஞ்சம். குடத்தை எடுத்து சொக்கி குளத்திலிருந்து 1 கிலோ மீட்டர் நடந்து தண்ணீர் கொண்டு வருவோம். மதுரை மனதுக்குப் பிடித்த ஊர். ஆனால், ஜிகர்தண்டா இந்த மாதம்தான் ருசித்தேன். ரொம்ப இனிப்பு மதுரை போலவே!’’

எம்.ஏ.நிவேதிதா, அரவக்குறிச்சிப்பட்டி..
இனி கம்ப்யூட்டர்தான் சகலமும் என்றாகிவிட்டதே. இது எதில் போய் முடியும்?
‘‘கம்ப்யூட்டர் வந்ததால் பேப்பர் குறைந்து விட்டதே! எழுத்தாளர் சுஜாதா சொன்னது ஞாபகம் வருகிறது. ‘‘கம்ப்யூட்டரைப் பழிக்காதீர்கள். அது வேலைக்கு லேட்டாக வராது. பக்கத்து கம்ப்யூட்டருடன் சண்டை போடாது. தீபாவளி போனஸ் கேட்காது. பாட்டி செத்துவிட்டாள் என்று பொய் சொல்லி மட்டம் போடாது, முக்கியமாக உங்கள் பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடி விடாது’’ என்று! கம்ப்யூட்டர் ஸிமீறீமீரீவீஷீஸீ ஆகிவிட்டது. மாற முடியாத நிரந்தர மதம். தழுவிக்கொள்வோம் வேறு வழியில்லை’’.

கிரிதர், திருச்சி.
என் மகள் மதிய வேளைகளில் பதினைந்து நிமிடமாவது குட்டித் தூக்கம் போடுகிறாள்? இது நல்லதல்ல என்று சொல்லியும் கேட்கமாட்டேன் என்கிறாள். குட்டித் தூக்கத்தை தடுக்க முடியுமா?
‘‘இத்தாலியர்கள் சியெஸ்டா என்று சொல்வார்கள். வெயில் அதிகமான பிரதேசத்தில் இந்தக் குட்டித்தூக்கம் சகஜம்தான். மகள் என்றீர்கள் வயது சொல்லவில்லையே? 26 வயதுக்கு மேலே என்றால் ஓகே. அதற்குக் கீழே என்றால் தூங்க விடாதீர்கள். இந்தக் குட்டித் தூக்கத்தை சிலர் பவர் நாப் என்றும் சொல்வார்கள். ஜிபிளிஹிஷிகிழிஞி கீமிழிரிஷி (ஆயிரம் கண்சிமிட்டல்) என்றும் சொல்வார்கள். 50வயதுக்கு மேல் அவசியம். அதற்கு முன்னால் அவசியம் இல்லை. நம் வயதை சொல்லி தப்பித்துவிட்டேன்’’.

ஊர்வசி, திண்டுக்கல்.
இன்றைய கிராமங்கள் எதை இழந்துவிட்டன? எதை இன்னும் இழக்காமல் இருக்கின்றன?
‘‘இப்போதுதான் தெற்கு மாவட்ட, விசிட் முடித்து வருகிறேன். நான் வாங்கிய ஐட்டம்ஸ் கொடுக்காப்புளி, பனக்கிழங்கு, ஊட்டி வர்க்கி, கருப்பட்டி, பனங்கல் கண்டு. நான் கிராமத்தை விட்டு வந்து 38 வருடம் ஆச்சு. கிராமத்தில் எப்போது கேபிள் டிவி நுழைந்ததோ, அப்போதே நகர, கிராம கோடுகள் அழிந்தாச்சு. இழந்தது அவர்கள் சமூக வழக்கம், கூடல்கள்! இழக்காதது.. அவர்கள் வட்டார வழக்கு, சில வரட்டு சம்பிரதாயங்ககள். வடக்கு நோக்கிப் போனால் சென்னையே ஒரு கிராமம்தான் என்கிறார்கள். சந்தோஷமாக கிராமமாகவே இருப்போம்’’.

கோமதி, தூத்துக்குடி.
என் மகளின் கல்லூரித்தோழிகள் அடிக்கடி என் வீட்டிற்கு வருகின்றனர். இதை நான் அனுமதிக்கலாமா? வெளி உலக பயத்தால் இப்படி கேட்கிறேன் தோழி?.
‘‘தோழிகள் போல பொக்கிஷம் எதுவும் கிடையாது. அதுவும் வயது ஆக ஆக இன்னமும் அருமை. நான் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது நான் ஒருத்திதான் மாணவி. மற்ற எல்லோரும் ஆண்கள். அப்போது விட்ட குறையையெல்லாம் இப்போது தோழிகளுடன் செலவிடுகிறேன். சினிமாவில் எல்லோரும் தோழிகள். சினிமா வெளியே இந்திராணி, அருணா ரெட்டி, கமலா, ஷெரின், நீனா ரெட்டி, அபர்ணா, பிரதிமா ரெட்டி, சாந்தா காளிங்கராயர், உமா பத்மநாபன், மஹாலக்ஷ்மி என்று வரிசையாக தோழிகள். வெளி உலக பயத்தைப் போக்குவதே தோழிகள்தான். சமீபத்தில் 80களின் தோழிகள் வாட்ஸ் அப்பில் ஒரு குழு தொடங்கினோம். யார் யார் தெரியுமா? ராதிகா, நதியா, குஷ்பூ, ரம்யாகிருஷ்ணன், சரிதா, லிஸ்ஸி, பூர்ணிமா, அம்பிகா, மேனகா, ராதா, ஜெயஸ்ரீ, ஷோபனா, சுமலதா மற்றும் நான். தினம் காலை முதல் இரவு வரை இந்த மொபைல் போன் எங்களை இணைக்கிறது. உங்கள் மகளுக்கு வேண்டாமா, இந்த அதிர்ஷடம்!’’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *