ஈரானைச் சுற்றி வளைக்குது போர் மேகங்கள்

slider உலகம்
இரான் அமெரிக்கா

 

கடந்த பத்து நாள்களுக்கு முன்பு ஈரான் நாட்டைச் சேர்ந்த கப்பலை பிரிட்டன் சிறைபிடித்திருந்தது. இந்த சம்பவத்தால் பிரிட்டனுக்கும், ஈரானுக்கும் மோதல் வெடித்தது. இப்போது பதிலடியாக இன்று (ஜுலை 20-ம் தேதி) எட்டு பயணிகளுடன் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கப்பலை சிறை பிடித்துள்ளது ஈரான். இந்த விவகாரம் பெரும் மோதலாக உருவெடுக்க வாய்ப்பிருப்பதாக சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 18-ம் தேதி, ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில், அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் ஈரானின் ஆளில்லா விமானம் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்து விளக்கமளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘’ஹார்மோஸ் ஜலசந்தியில் அமெரிக்க கப்பலின் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் விளைவிப்பதுபோல் கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் அந்த ஆளில்லா விமானம் பறந்தது. இது கப்பலின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக உள்ளது என பலமுறை எடுத்துக்கூறியும் அந்த ஆளில்லா விமானம் விலகி செல்லவில்லை.   இதனால், தற்காப்பு நடவடிக்கைக்காக அந்த ட்ரோன் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டது” என்று  கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்தே ஈரானுடனான அமெரிக்க உறவு மோசமடைந்து வந்து இப்போது பெரும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது.ஒருபக்கம் அமெரிக்காவுடனான பகை இருந்துவரும் நிலையில், புதிதாக பிரிட்டன் நாட்டுடனும் ஈரான் மோதும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. வளைகுடா  கடல் பகுதி வழியாக ஈரான், இந்தியா உட்பட மற்ற வெளிநாடுகளுடன் எண்ணெய் போக்குவரத்தில் ஈடுபடுவது அமெரிக்க நலன்களுக்கு விரோதமானது என்பதில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தீவிரமாகவும், பிடிவாதமாகவும் இருந்து வருகிறது. இதன் போக்கே மோதலாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் பிரிட்டனுடனும் ஈரானுடன் மோதலை ஆரம்பித்திருப்பதால், ஒரே நேரத்தில் உலகின் இரண்டு பெரிய நாடுகளை பகைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் ஈரான் சிக்கியிருக்கிறது. இதிலிருந்து எப்படி ஈரான் மீளப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகளிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதே தற்போதைய சர்வதேச நிலவரம்.

 

நிமலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *