விஜய தேவரகொண்டா

விஜய் சேதுபதிக்கு ரசிகரான தெலுங்கு ஹீரோ

slider சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். வருடத்துக்கு 5 படங்களுக்கு மேல் நடிக்கும் ஹீரோ என்றால் இவர் ஒருவர் மட்டும்தான். இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட சில ஹீரோக்கள் படத்திலும் இவர் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய தேவரகொண்டா
விஜய தேவரகொண்டா

 

இவரது நடிப்பு தெலுங்கு முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவை ரொம்பவே கவர்ந்து விட்டது.  ‘நோட்டா’  படத்தைத் தொடர்ந்து தமிழில்  ‘டியர் காம்ரேட்’ படம் மூலம் களம் இறங்குகிறார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தின் விளம்பர  நிகழ்ச்சிக்காக, ஜூலை 18 அன்று விஜய தேவர கொண்டா  சென்னை வந்தார்., அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘’தமிழில் மணிரத்னம், ‌ஷங்கர் ஆகிய இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எனக்கு  இருக்கிறது. அதுபோல் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அவர் நடித்த  ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் பார்த்த பின்னர் அவரது ரசிகனாகி விட்டேன்’’ என்று கூறியிருக்கிறார்.

ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோவை பாராட்டிப் பேசுவது அபூர்வமாகிவிட்ட நிலையில்,  ‘விஜய் சேதுபதியின் ரசிகனாக உள்ளேன்’ என்று விஜய தேவரகொண்டா பேசியிருப்பது கோலிவுட்டில் பலரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *