லஷானா லின்ச்

ஹாலிவுட்டின் அடுத்த ஜேம்ஸ்பான்ட் லஷானா லின்ச்

slider சினிமா

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஒரு பெண்!

ஹாலிவுட்டில் பரபரப்பு!

லஷானா லின்ச்
அடுத்த ஜெம்ஸ்பான்ட்

கடந்த 40 வருடத்திற்கு மேலாக ஹாலிவுட்டிலிருந்து உருவாகி உலகமெங்குமுள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த படம் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் கொண்ட படங்கள். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது பாண்ட் – 25 உருவாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் இந்த படத்திற்குப் பெயர் வைக்கப்படவில்லை.

கடந்த சில ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் பிரபலம் டேனியல் க்ரெய்க் நடித்துள்ளார். இப்போது உருவாகிவரும் பாண்ட்- 25 படம்தான் இவருக்கு கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம்.  இதன் பிறகு இந்தக் கதாபாத்திரத்தில் தான் தொடர விரும்பவில்லை என்பதை அவர் ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.

 

இந்நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அமெரிக்க கருப்பின நடிகர் இட்ரிஸ் எல்பா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைத்துத் தரப்பையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ஒரு பெண் நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  ‘கேப்டன் மார்வல்’ படத்தில், நாயகியின் உயிர்த் தோழி கதாபாத்திரத்தில் நடித்த லஷானா லின்ச் தான் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்கவுள்ளார். இது பற்றி தற்போது எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படத்திலேயே காட்சி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபமாக, ஹாலிவுட்டில் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்துள்ளன. பிரதான கதாபாத்திரங்களில் பெண் நடிகர்களை நடிக்க வைக்கும் போக்கு நிலவி வருகிறது. தற்போது அதன் தொடர்ச்சியாக லஷானாவின் தேர்வும் பார்க்கப்படுகிறது.  அடுத்த பாண்ட் படத்தின் கதாசிரியர் ஃபோபி வாலர் ப்ரிட்ஜ்தான் இந்தத் தேர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. 007 என்ற பெயர் ரகசியப் போலீஸுக்கானது என்பதால் பழைய ஜேம்ஸ் பாண்டிடமிருந்து அந்தப் பட்டத்தை மட்டுமே பெற்றுக்கொள்கிறார்.

மேலும், இனி பாண்ட் கேர்ள்ஸ் என்ற பதத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும், பாண்ட் பெண்மணி (Bond Women) என்ற பதமே பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்த புதிய அறிவிப்புக்கு ஆதரவு எதிர்ப்பு என இரண்டுமே ரசிகர்களிடமிருந்து வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *