indian 2

கமல் அரசியலுக்கு கைகொடுக்குமா ’இந்தியன் – 2’

slider சினிமா

புது திரைக்கதை மாற்றத்துடன் இந்தியன் – 2

 

indian 2
இந்தியன் 2

‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த  ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனால், கமல் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததால் படப்பிடிப்பு நின்றுபோனதாக செய்திகள் வந்தன.

இதற்கிடையில் இயக்குநர் ஷங்கர்  வேறு தயாரிப்பாளர்களை அணுகி இந்தியன் 2 படத்தை இயக்கப்போவதாகவும் திரைத்துறையில் பேசப்பட்ட நிலையில், மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வரும் ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழு இபோது அறிவித்துள்ளது.

இந்தியன் – 2 படத்தில் காஜல் அகர்வால்  ஹீரோயினாக நடிக்கிறார் என்கிற தகவல் மட்டும் வெளியாகியுள்ள நிலையில், லேட்டஸ்ட் தகவலாக ப்ரியா பவானி சங்கரும், ஜஸ்வர்யா ராஜேஷும் நடிக்கிறார்கள் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இத்துடன் நடிகர் சித்தார்த்தை இந்தப் படத்தில் நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம்.

‘இந்தியன் 2’ படம் நிறுத்தி வைக்கப்பட்ட இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் ஷங்கர் திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பதாகவும், இது முன்பைவிட அசத்தலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புதிய திரைக்கதை மாற்றத்தினாலேயே பிரியா பவானி சங்கரும், ஐஸ்வர்யா ராஜேஷும் படத்தில் கமிட் ஆகியுள்ளார்களாம். மேலும், கமலின் அரசியல் வளர்ச்சியை மனதில் வைத்தும் திரைக்கதையில், வசனங்களில் நிறைய மாற்றம் செய்துள்ளார்களாம். படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *