DINAKARAN

இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை! கட்சியைப் பலப்படுத்தும் பணியில் தினகரன்

slider அரசியல்

அ.ம.மு.க.வில் உதயமாகிறது இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை…

மீண்டும் களத்தில் குதிக்கிறார் தினகரன்!

 

DINAKARAN
TTV DINAKARAN

பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் சற்றே சோர்ந்து போயிருந்த அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீண்டும் கட்சிப் பணியில் உற்சாகம் கொள்ளத் தொடங்கிவிட்டார் என்பதாக தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன.

அ.ம.மு.க.வின் முக்கிய தளபதிகளாக இருந்த செந்தில் பாலாஜி, தங்க. தமிழ்ச்செல்வன் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியவர்களை கட்சி இழந்துள்ளதால், இதற்கு ஈடுகட்ட ஒரு புதுத் திட்டம் வைத்திருக்கிறாராம் டி.டி.வி. தினகரன். எப்படியும் பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வருவதற்குள் இரண்டாம்கட்ட தலைவர்களில் இன்னும் 50 பேர் வேறு கட்சிக்கு போய்விடுவார்கள் என்று கணக்கு போட்டுள்ளராம். இதற்காக கட்சியின் முக்கியப் பதவிகள் மற்றும் பொறுப்புகளை 50 வயதிற்குக் குறைந்த இளைஞர்களுக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ளாராம். இதில் ஒரு சில முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க உள்ளாராம்.

அ.ம.மு.க.வை நீண்டகால நோக்கில் சீரமைக்கவே இந்த முடிவாம். தினகரன் பொறுத்தவரை கட்சியை விட்டு போகிறவர் போகட்டும். ஆனால் கட்சியை நம்பி இருப்பவர்களை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்துள்ளாராம்

 குறிப்பாக, ஏற்கெனவே 2006-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை என்கிற கான்செப்ட்டை சொல்லி, ஜெயலலிதாவிடம் அப்போது ஓ.கே. வாங்கி அதற்காக தமிழகம் முழுவதும் சென்று பொறுப்பாளர்களை நியமித்த அனுபவம் இந்த விஷயத்தில் தினகரனுக்கு மிகவும் உதவும் என்றும் அ.ம.மு.க. வட்டாரத்தில் சொல்கிறார்கள். இப்படி இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையில் தினகரனால் நியமிக்கப்பட்டவர்களில் பலர் 2011-ம் ஆண்டு அமைச்சராகவும் ஆனார்கள். கட்சியின் ஆளுமைகளை கண்டுபிடிப்பதில் தினகரனுக்கு நிறையவே திறமை உண்டு என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

  அப்படியென்றால் அ.தி.மு.க.வில் உள்ளது போன்று இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை போன்ற அமைப்பை அ.ம.மு.க.விலும் விரைவில் ஏற்படுத்தப் போகிறாரா தினகரன்?  தினகரன் ஒடுங்கிவிட்டார். தினகரன் அடங்கிவிட்டார் என்றெல்லாம் பேசப்படும் பேச்சுக்கு சரியான பதிலடி கொடுக்க தினகரனும் பக்கா பிளான்களுடன் காத்திருக்கிறாரோ?

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *