விக்ரம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் பிரமாண்ட படம்

slider சினிமா

சீயான் விக்ரம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்….

எகிறும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

 

  தமிழ் சினிமாவில் பாலா இயக்கிய ’சேது’ படத்தில் நடித்தபின்பு, நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார் என்றாலும், விக்ரம் நடித்த படங்களுக்கு  இதுவரை இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்ற குறை இருந்து வந்தது. அந்தக் குறையை தீர்க்க வருகிறது ’விக்ரம் 58’ படம்.

 

ரஹ்மான் விக்ரம்
Chiyaan Vikram, A R Rahman

சீயான் என ரசிகர்களால் அடைமொழியோடு கொண்டாடப்படும் நடிகர் விக்ரமின் இந்தப் படத்தை ’டிமாண்டி காலனி’,  ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

 

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஆகஸ்ட் 2019) துவங்கவிருக்கிறது.  ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகவுள்ள இப்படத்தின் முன்கட்டப் பணிகள் (Pre Production) தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் தயாரிக்கப்படவிருக்கிறது. முதன் முதலாக விக்ரம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைவதால், இப்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் கூடிவிட்டது.

வெற்றி வாகை சூடுமா விக்ரம் – ரஹ்மான் கூட்டணி?

 

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *