வடசென்னை

வடசென்னை இரண்டாம் பாகம் உறுதி – தனுஷ்

slider சினிமா

            வடசென்னை இரண்டாம் பாகம் நிச்சயம்

தனுஷின் ட்வீட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

 

வடசென்னை
வடசென்னை

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’வடசென்னை’ கடந்த ஆண்டு வெளியானது. தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு தரப்பினருக்கும் இப்படம் மிகவும் பிடித்திருந்தது. இதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எற்பட்டது.

ஆனால், திடீரென  ‘வடசென்னை’ படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இதற்குக் காரணம் இயக்குநர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் தனுஷ் நடித்துவருவதால்,  ‘வடசென்னை 2’ டிராப் என்கிற செய்தி அதிக வேகமாக பரவியது.

இந்நிலையில், தனுஷ் இப்போது ஒரு ட்விட்டர் பக்கத்தில்,  “என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்படக் காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் நிச்சயம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ.” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் வடசென்னை படத்தின் 2-ம் பாகம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *