கிரிக்கெட் 2019 உலக கோப்பை

உலக கோப்பை கிரிக்கெட். சர்ச்சையை கிளப்பும் இறுதிப் போட்டி முடிவுகள்

slider விளையாட்டு

            இங்கிலாந்தின் வெற்றியில் முறைகேடு…

             வருத்தத்தில் நியூஸிலாந்து!

 

கடந்த 14-ம் தேதி, இங்கிலாந்திலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன் அடித்தது.

கிரிக்கெட் 2019 உலக கோப்பை
உலக கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து

இதன் பின்னர் 242 ரன்கள் அடித்தால் உலகக்கோப்பையை கைபற்றிவிடலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 17 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் 7 ரன்னிலும், மோர்கன் 9 ரன்னிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்னர் வந்த பட்லர், ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில் பட்லர் 59 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப் பட்ட நிலையில்  இங்கிலாந்து அணி 14 ரன்கள் மட்டுமே எடுக்க, போட்டி டை ஆனது..

 

 

அடுத்து வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. பின்னர் 16 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 6 பந்துகளில் 15 ரன்கள் அடித்தது. இதில் ஆட்டம் டை கண்டது. இப்படி நடப்பது என்பது கிரிக்கெட் வரலாற்றில் முன்பு எப்போதும் நடந்திடாத ஒன்று.   இதனையடுத்து கிரிக்கெட் விதிகள்படி,  பவுண்டரிகள் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் 26 பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.

 

இங்கிலாந்து அணியுடனான தோல்வி குறித்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘’போட்டியில் எங்களுக்கு எதிராக நிறைய விஷயங்கள் நடைபெற்றன. இங்கிலாந்துக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு இங்கிலாந்து, முழு தகுதியானது தான். இந்த போட்டி மிகவும் சவாலானது. பிட்ச்சின் தன்மையும் நாங்கள் எதிர்பார்த்தது போன்று இல்லை. எங்கள் வீரர்கள் இறுதி வரை கடுமையாக போராடினர். ஆனாலும் தோற்று விட்டோம். இது எங்களுக்கான நாள் கிடையாது” என்று கூறியுள்ளார்.

இந்த ஆட்டத்தின் முடிவு குறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் நிறைய வருத்தம் இருக்கிறதாம். அதாவது பவுண்டரி அடிப்படையில் பார்த்தால், இங்கிலாந்து வெற்றியை தீர்மானிக்க முடியும். விக்கெட்டுகள் அடிப்படையில் பார்த்தால் நியூஸிலாந்துதான் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இந்த போட்டியில் இழந்திருக்கிறது. ஆனால், நியூஸிலாந்து 8 விக்கெட்டுக்களைத்தான் இழந்திருந்தது.

இப்படியான விமர்சனம் சமூக வலைத்தளங்களிலும் ஏகத்துக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தமுறை புதிய அணிக்கு அதாவது இதுவரை உலகப் கோப்பையை ஒருமுறைகூட வெல்லாத அணியான இங்கிலாந்துக்கு கிடைத்திருப்பது குறித்து பலரும் பாராட்டவும் செய்கிறார்கள். என்னவிருந்தாலும் கிரிக்கெட் என்னும் விளையாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடாச்சே இங்கிலாந்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *