பா.ஜ.கவின் நெக்ஸ்ட் மூவ்

பா.ஜ.க.வின் அரசியல் அதிரடியில் அடுத்து தமிழகமா?

slider அரசியல்

கர்நாடகம், கோவா… அடுத்து?

பா.ஜ.க.வின் அதிரடி ஆபரேஷனில் தமிழகமும் உண்டா?

 

பா.ஜ.கவின் நெக்ஸ்ட் மூவ்
அதிரடி அரசியலில் பா.ஜ.க

சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் மற்றும் ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பை நட்சத்திர ஓட்டலில் அடைக்கலமானார்கள். இது நடந்த அடுத்த சில நாட்களிலேயே கோவாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 10 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். கர்நாடகாவில் ஆரம்பித்த இந்த அரசியல் புயல் தொடர்ச்சியாக கோவாவிலிலும் வீசியது கண்டு, இந்திய அரசியல் வட்டாரம் ஆச்சர்யப்பட்டு நிற்கிறது.

 

கர்நாடகாவில் பா.ஜ.க. எதிர்க் கட்சி. ஆனால், கோவாவில் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி. இதுவும் சொற்ப மெஜாரிட்டியில்தான் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மூலம் கோவா சட்டமன்றத்தில் பா.ஜ.க.வின் பலம் 27ஆக உயர்ந்துவிட்டது. அங்கு சட்டமன்றத்தின் எண்ணிக்கை 60. இதன்மூலம் தனிப் பெரும்பான்மையை பா.ஜ.க. நெருங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் இரண்டு மடங்கு எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்று பா.ஜ.க.வில் இணைந்திருப்பதால், அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ்.நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம். அனேகமாக விரைவில் கோவா அமைச்சரவை மாற்றப்பட்டு, புதிதாக இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பிரித்து தங்களுடன் இணைத்துக்கொண்ட பா.ஜ.க.வின் செயல் ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால், எம்.எல்.ஏ.க்கள் 10 பேரும் விருப்பப்பட்டு, எந்தவித நிபந்தனையும் இன்றி இணைந்ததாக கோவா முதல்வர் கூறியுள்ளார்.

பா.ஜ.க. ஆரம்பித்துள்ள கர்நாடகா அடுத்து கோவா என்ற இந்த அரசியல் ரீதியான நடவடிக்கைகள், அடுத்து எந்த மாநிலத்தை தாக்கப் போகிறதோ? மேலும், இந்த ரவுண்டில் தமிழகம் இடம்பெறுமா? அப்படி இடம்பெற்றால் அது எந்த வகை அரசியல் புயலாக இருக்கும் என்றெல்லாம், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பல்வேறு கோணங்களில் தீவிர விவாதங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.

 

  • தொ.ரா.ஸ்ரீ.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *