You Are Here: Home » 2019 » July

அ.ம.மு.கவால் ஆயிரம் ஓட்டுக்கள்கூட வாங்க முடியாது! தங்க தமிழ்ச் செல்வன்

  அ.ம.மு.க.விலிருந்து தங்க. தமிழ்செல்வன் வெளியேறி தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார். தேனி மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக் கூட்டம் நடத்தி தன் ஆதரவாளர்களையும் தி.மு.க.வில் இணைத்து விட்டார். ஆனாலும் பிரிவதற்கு முன்பு டி.டி.வி. தினகரனை எப்படியெல்லாம் விமர்சித்தாரோ அதை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே இப்பவும் விமர்சித்து வருகிறார். அந்த வரிசையில் வேலூர் தேர்தலோடு தினகரனை இணைத்து தங்க.தமிழ்செ ...

Read more

துரோகியைவிட எதிரிக்கு ஆதரவளிப்பதில் தவறில்லை! கர்நாடக அரசியலில் திரும்பவும் திருப்பம்.

  முதல்வராக இருந்த குமாரசாமியின் ஆட்சி, சட்டசபையில் தோற்றபின்பு பா.ஜ.க.வின் எடியூரப்பா கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றிருக்கிறார். இவருக்கு கர்நாடக கவர்னர் 31-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிருபிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். இதனால் பா.ஜ.க. தரப்பிலும் ஆட்சியை தக்கவைக்க பல்வேறு ரகசிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இதயத் துடிப்பை எகிறவைக்கும் செய்திகள் கர்நாடகத்ததிலிருந்து வெளியாகிக் ...

Read more

என்ன ஆச்சு காங்கிரஸ் கட்சிக்கு?

    ராகுல் காந்தியின் ராஜினாமாவால் தலைவர் இன்றி தவித்துவரும் காங்கிரஸ் கட்சி, அதிரடி நடவடிக்கையாக காரிய கமிட்டி கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி, அதன்மூலம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்திருப்பதாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. சோனியா காந்தி நாடாளுமன்ற கட்சி தலைவராக இருந்த போதிலும், உடல் நலக் குறைவு காரணமாக, அவரால் தேசிய அளவில் கட்சி விவகார ...

Read more

அந்த மூன்று லட்சம் ஓட்டுக்கள் யாருக்கு? குழப்பத்தில் அ.தி.மு.க – தி.மு.க

  வேலூர் தொகுதி  நாடாளுமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவினாலும், அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையேதான் உண்மையான மோதல் நிலவுகிறது. எப்படியாவது வெற்றி பெற்றாகவேண்டும் என்கிற முனைப்போடு இந்த இரு கட்சிகளும் மிகக் கவனமான திட்டமிடல்களுடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இக் கட்சிகளின் பிரசாரங்களும், அந்தந்த கட்சிகளின் முன்னணி தலைவர்களின் வருகையும், வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட் ...

Read more

இயக்குநர் கௌதம் மேனன் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட்டது ஏன்?

  நடிகர் தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்கிற படத்தையும், நடிகர் விக்ரமை வைத்து ’துருவநட்சத்திரம்’ என்கிற படத்தையும் இயக்குநர் கௌதம்மேனன் எடுத்து முடித்தார். ஆனால், இந்த இரு படங்களும் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. பட்ஜெட் அதிகமானதால் ஏற்பட்ட பணப் பிரச்னையால்தான் இப்படங்கள் வெளியாகாமல் உள்ளன என்கிற தகவல்களும் உண்டு. இந்நிலையில், கௌதம்மேனன் சில வருடங்களுக்கு முன்பு விஜ ...

Read more

வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக பதவி உயர்வு பெறுகிறார் பரோட்டா சூரி!

  தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களாக வலம் வந்த அத்தனை பேரும் சில படங்களில் ஹீரோ வேடம் போட்டதுண்டு. சில காமெடியன்கள்,  ‘இனிமேல் இப்படித்தான்’ என தங்களுக்குள்ளேயே சபதம் போட்டுக்கொண்டு,  “ஹீரோவாக மட்டுமே இனி நடிப்பேன்” என சொந்தக் முதலீட்டில் சூனியம் வைத்துக்கொண்டதும் உண்டு.   ஆனால், இந்த ஹீரோ அடையாளமே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தவர் நடிகர் சூரி. பலமுறை நகைச்சுவை பின்னணி கொண்ட கதையில் ஹீரோவாக நடி ...

Read more

என்னைக் கவர்ந்த பெண்கள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

      நிலவும் பெண்ணும் கவிஞர்களை உருவாக்கும் மாயம், உலகம் அறிந்த இரகசியம். இங்கே ஒரு சிறு மாற்றமாய் ஒரு கிராமத்தானை அறிவியலாளானய் உருவாக்கிய உண்மை உங்களுக்குத் தெரியுமா?     அம்மா: தெருவிளக்கில்லா கோதாவாடிக் கிராமத்தின் இரவு வானத்தில் நிலவையும், நட்சத்திரங்களையும் பற்றி அந்தப் பால்ய பருவத்தில் எனக்குப் பாலும் சோறுமூட்டி அம்மா அறிமுகப்படுத்தினார்.  உயரங்கள் தொடும் நாட்களுக்கு உரம் போட்ட ந ...

Read more

சிறுகதை – கீரிப்பட்டி வேலம்மா – ஜே.வி.நாதன்

  பொழுது விடிந்ததும் வேலம்மாள் எழுந்து வீட்டுக்கு முன்னால் இருந்த கிணற்றினுள் எட்டிப் பார்த்தாள். பாறைதான் தெரிந்தது. கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து விட்டாள். கடந்த பத்து நாட்களாக அரை அடி ஆழம் நீர் தெரியும். பகலில் இறைத்தானதும் இரவில் ஊறி, காலையில் மீண்டும் அரையடித் தண்ணீர் நிற்கும். நேற்றிலிருந்து அதுவும் தீர்ந்துவிட்டது. கீரிப்பட்டியில் எல்லாக் கிணறுகளும் வற்றி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் வேலம் ...

Read more

இங்கிலாந்தில் தனியார் மருத்துவமனைகள் கிடையாது – டாக்டர் பத்மா சுந்தரம்

  ‘சந்திராயன் 2’ பறந்துகொண்டிருக்கும் வேகத்தை கால்குலேட் பண்ணிக்கொண்டு, நிலாவுக்குள்ளும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை ஆரம்பித்துவிட முடியுமா என்கிற சிந்தனையில் வாழ்கிற இந்தக் காலத்தில், பழங்கால டுபுக்கு கதைகளை வைத்துக்கொண்டு, பாட்டி வைத்தியம் என்கிற பெயரில், கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் உடல்நலக் குறிப்புகளை சொல்லித் திரிகிறதற்கும் ஒரு குரூப் எப்பவுமே தயாரா இருப்பாங்க. டெஸ்ட் டியூப் பேபிகளுக்குக்கு கல்யாணம ...

Read more

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் – வீட்டு உபயோக குறிப்புகள்

எம்ப்ராய்டரி செய்த துணிகளை, கையில் துவைத்தால் டிசைன்கள் கெட்டுப்போகாமலும், நூல் பிரிந்து விடாமலும் இருக்கும். வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கப் போடும்போது, வெள்ளைத் துணிகளை தனியாகவும், வண்ணத் துணிகளை தனியாகவும்தான் போட வேண்டும். சிலர் துணிகளுக்கு நீலம், கஞ்சி போடுவதற்காக, அவற்றையும் சேர்த்து மெஷினுள் போட்டு விடுகிறார்கள். இப்படிச் செய்வதால் கஞ்சித் தூள் மெஷினின் பக்கங்களில் மெல்லியதாகப் படிந்து, நாளடைவில் இ ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top