பதுங்கி பாயனும் தல – pathungi payanum thala Reviewed by Momizat on . ‘பதுங்கி பாயனும் தல’ எனும் மாறுபட்ட தலைப்புடன் திரைத்துறைக்குள் களமிறங்கியிருக்கிறார்  ‘மீடியா பேஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆமீனா ஹீசைன். படத்தை இயக ‘பதுங்கி பாயனும் தல’ எனும் மாறுபட்ட தலைப்புடன் திரைத்துறைக்குள் களமிறங்கியிருக்கிறார்  ‘மீடியா பேஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆமீனா ஹீசைன். படத்தை இயக Rating: 0
You Are Here: Home » சினிமா » பதுங்கி பாயனும் தல – pathungi payanum thala

பதுங்கி பாயனும் தல – pathungi payanum thala

பதுங்கி பாயனும் தல – pathungi payanum thala

‘பதுங்கி பாயனும் தல’ எனும் மாறுபட்ட தலைப்புடன் திரைத்துறைக்குள் களமிறங்கியிருக்கிறார்  ‘மீடியா பேஷன்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆமீனா ஹீசைன். படத்தை இயக்கியிருப்பவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி.

தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவை படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இதைக் கவனத்தில் கொண்டு முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘பதுங்கி பாயனும் தல’  படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி, இந்தப் படத்தில் ‘மாமனா மச்சானா’ என்கிற பாடலையும் எழுதியிருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியால் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘மாமனா மச்சானா’ பாடலின் சிங்கிள் ட்ராக் முகநூலில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது.

 

பதுங்கி பாயனும் தல

pathungi payanum thala

 

‘பதுங்கி பாயனும் தல’ படத்தின் இயக்குநர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி  அறிமுக இயக்குநர் என்றாலும், படப்பிடிப்பு நாட்களையும், அதற்குத் தகுந்த திட்டங்களையும், அதற்கான வியூகங்களையும் மிகச் சரியாகக் கணக்கிட்டு படப்பிடிப்பை நடத்தியதால், 53 நாட்களில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பை 45 நாட்களிலேயே முடித்து, தயாரிப்பாளருக்கு பணத்தை மிச்சம் செய்து கொடுத்திருப்பது, அவருடைய திட்டமிடலுக்கும், உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இயக்குநர் சீமானிடம் உதவி இயக்குநராகவும், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை இயக்குநராகவும் களப் பயிற்சி எடுத்தவர் எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி.

விரைவில் வெளியாகவிருக்கும்  ‘பதுங்கி பாயனும் தல’ ரசிகர்களின் வயிறுகளை குலுங்கச் செய்து வலிக்கச் செய்யும் என்கிறது படக்குழு.

திரையில் :

நாயகன் – மைக்கேல்

நாயகி – நைனிகா

மற்றும்

வேல ராம மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, ஆர்.என்.ஆர்.மனோகர், சிங்கப்பூர் தீபன், ராகுல் தாத்தா, ஹலோ கந்தசாமி.

 

திரைக்குப் பின்னால் :

இயக்குநர் – எஸ்.பி.மோசஸ் முத்துப்பாண்டி

ஒளிப்பதிவு – கே.ஏ.ரோவின் பாஸ்கர்

இசை – வல்லவன் சந்திரசேகர்

படத்தொகுப்பு – டி.மனோஜ்

பாடல்கள் – ஞானகரவேல்

நடன இயக்குநர்கள் – நோபல், பாபா பாஸ்கர், பேபி ஆண்டனி, கேசவ்

சண்டைப் பயிற்சி – ஸ்டன்னர் ராம்

கலை இயக்குநர் – ரவீஷ்

டிசைன் – சிந்து கிராபிக்ஸ்

மக்கள் தொடர்பு – வின்சன் சி.எம்.

 

 

 

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top