கரு – karu Reviewed by Momizat on . ‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்க ‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்க Rating: 0
You Are Here: Home » சினிமா » கரு – karu

கரு – karu

‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்கப்பட்டதிலிருந்தே நிறைய பிரச்னைகள். படத்தின் தலைப்பு தனக்கானது என ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மணிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, படத்தை வெளியிடுவதற்கு தடையுத்தரவு பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதித் தீர்ப்பில் ‘கரு’ படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, படக்குழுவினர் வெளியீட்டு வேலைகளை துவங்கிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 24ம் தேதி நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய் “என்னுடைய சினிமா கேரியரில் ‘கரு’ முக்கியமான படமாக இருக்கும். 2013ம் ஆண்டிலேயே எழுதி முடித்துவிட்ட இந்தப் படத்தின் கதையை லைகா நிறுவனத்தாரிடம் சொன்னேன். படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்கு தான் பண்ணனும் என்று கூறினார்கள்.

 கரு

karu

 

இந்தப் படத்தின் நாயகியாக நடிக்க சாய் பல்லவியை அணுகினோம். அவர் நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்தப் படத்துக்காக அணுகியதால், முதலில் மறுத்து விட்டார். பின்னர் முழுக் கதையையும் அவருடைய அம்மாவிடம் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே நாயகி சாய் பல்லவி தான். நிச்சயமாக மிகப்பெரிய நடிகையாக வருவார்” என்றார்.

கருக் கலைப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம் ’கனம்’ எனும் தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top