நாக் ஸ்டூடியோஸ் – knack studios Reviewed by Momizat on . ஆபரணத் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் ‘என்.ஏ.சி ஜூவல்லர்ஸ்’ தற்போது திரைத்துறையிலும் கால் பதித்திருக்கிறது. ஒரு சினிமாவின் தரத்தை நிர்ணயிப்பதில் அத ஆபரணத் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் ‘என்.ஏ.சி ஜூவல்லர்ஸ்’ தற்போது திரைத்துறையிலும் கால் பதித்திருக்கிறது. ஒரு சினிமாவின் தரத்தை நிர்ணயிப்பதில் அத Rating: 0
You Are Here: Home » சினிமா » நாக் ஸ்டூடியோஸ் – knack studios

நாக் ஸ்டூடியோஸ் – knack studios

நாக் ஸ்டூடியோஸ்  – knack studios

பரணத் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் ‘என்.ஏ.சி ஜூவல்லர்ஸ்’ தற்போது திரைத்துறையிலும் கால் பதித்திருக்கிறது.

ஒரு சினிமாவின் தரத்தை நிர்ணயிப்பதில் அதன் தொழிற்நுட்ப பிரிவுகளுக்கு முக்கியப் பங்குண்டு. குறிப்பாக, படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு ‘போஸ்ட் புரோடக்ஷன்’ எனச் சொல்லப்படும் ‘எடிட்டிங்’ ‘டப்பிங்’ ‘ பின்னணி இசை சேர்ப்பு’, ‘மிக்ஸிங்’, ‘ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்,’ ‘கலர் கரெக்ஷன்ஸ்’ என பல்வேறு ‘பிற்சேர்க்கை தொழிற்நுட்பங்களே சினிமாவை முழுமையடையச் செய்கின்றன. இந்த பிற்சேர்க்கை விஷயங்களுக்காக மேற்கொள்ளப்படும் தொழிற்நுட்பங்களே ஒரு சினிமாவின் தரத்தை மேம்படுத்தி, பார்வையாளர்களை பரவசமடையச் செய்கிறது.

நாக் ஸ்டூடியோஸ்

Knack Studios

திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இந்த ‘போஸ்ட் புரோடக்ஷன்’ எனச் சொல்லப்படும் பிற்சேர்க்கை தொழிற்நுட்பங்கள் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், இந்தியாவில் உலகத் தரத்திலான ‘போஸ்ட் புரொடக்ஷன்’ தொழிற்நுட்பத்தை வழங்கக்கூடிய, நவீன தரத்திலான ஸ்டூடியோக்கள் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே அமைந்திருக்கின்றன. இந்தக் குறையைப் போக்குவதற்காகவே ‘என்.ஏ.சி ஜூவல்லர்ஸ்’ நிறுவனம் மிகப் பிரமாண்டமான ஒரு ஸ்டூடியோவை சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் நிறுவி, அதற்கு ‘நாக் ஸ்டூடியோஸ்’ என பெயரிட்டிருக்கிறது.

15000 சதுர அடியில் இயங்கும் நாக் ஸ்டூடியோஸில் திரைத்துறை கலைஞர்களுக்கும், தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கும் புத்துணர்ச்சி தரக்கூடிய பூங்கா, ஓய்வு அறைகள், தரமான உணவு விடுதியும் உண்டு.

இதுவரையில் 5.1 மற்றும் 7.1 தொழிற்நுட்பங்களே இந்தியத் திரைத் துறையில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ஹாலிவுட் சினிமாக்கள் ‘டால்பி அட்மோஸ்’ எனும் தொழிற்நுட்பத்திற்குள் புகுந்து, மிகத் தரமான ‘போஸ்ட் புரோடக்ஷன்’ செயல்பாடுகளைக் கொண்டு, ரசிகர்களை பரவசமடையச் செய்து வருகிறது. இப்போது, என்.ஏ.சி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் ‘நாக் ஸ்டூடியோஸ்’ம் ‘டால்பி அட்மோஸ்’ தொழிற் நுட்பத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகளைத் தரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இசைக் குழுவினர்களையும், இசைக் கலைஞர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களுடைய திறமையை  வெளிக் கொணர்ந்து உலகறியச் செய்வதற்காகவும் ‘நாக் ஸ்டூடியோஸ் நிறுவனம்’ ‘சோனி மியூசிக்’ நிறுவனத்துடன் இணைந்து ‘தி மெட்ராஸ் கிக்’ என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளது. சுய இசைக்குழுக்களும், சுய இசையமைப்பாளர்களும் ‘மெட்ராஸ் கிக்’ மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். பல புதிய திறமையாளர்களைக் கண்டறியும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மெட்ராஸ் கிக்’ அமைப்பை திரைத்துறையில் சாதிக்க விரும்புவர்களும், கலைத் துறையில் சாதிக்க விரும்புவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top