அண்டாவ காணோம் – andava kanom Reviewed by Momizat on . தமிழ்த் திரைப்பட வணிகத்திலும், தயாரிப்பிலும் முன்னணியில் உள்ள தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனத்தின் சதீஷ்குமார். இவருடைய வெளியீட்டில் வந்த ‘த தமிழ்த் திரைப்பட வணிகத்திலும், தயாரிப்பிலும் முன்னணியில் உள்ள தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனத்தின் சதீஷ்குமார். இவருடைய வெளியீட்டில் வந்த ‘த Rating: 0
You Are Here: Home » சினிமா » அண்டாவ காணோம் – andava kanom

அண்டாவ காணோம் – andava kanom

அண்டாவ காணோம் – andava kanom

தமிழ்த் திரைப்பட வணிகத்திலும், தயாரிப்பிலும் முன்னணியில் உள்ள தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனத்தின் சதீஷ்குமார். இவருடைய வெளியீட்டில் வந்த ‘தங்க மீன்கள்’, ‘குற்றம் கடிதல்’, ‘பரதேசி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, தேசிய விருதுகளையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.

 

அண்டாவ காணோம்

அண்டாவ காணோம்

தேசிய விருது பெற்ற ‘தங்க மீன்கள்’ படத்தின் இயக்குநர் ராம் இயக்கத்தில், சதீஷ்குமார் தயாரித்திருக்கும் “தரமணி” படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், சதீஷ் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அண்டாவ காணோம்’ படத்தின் பாடல்களும், டீசரும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

 

‘அண்டாவ காணோம்’ படத்தின் இயக்குநர் வேல்மதி. இவர் இயக்கும் முதல் திரைப்படமும் இதுதான். இப் படத்தில் கதையின் நாயகியாக ஷ்ரேயா ரெட்டி நடித்திருக்கிறார். ‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்து பெரும் பாராட்டைப் பெற்றவர் ஷ்ரேயா ரெட்டி.

 

“கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை சினிமாத்தனம் இல்லாமல் எதார்த்தமாக காட்டிய படங்கள் யாவும் தமிழ்ச் சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் “அண்டாவ காணோம்” திரைப்படமும் இடம் பெறும். மேலும், இந்தப் படம் பல விருதுகளையம் பெரும்” என நம்பிக்கையோடு படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் இயக்குநர் வேல்மதி.

ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக தமிழ்ச் சினிமாவில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

About The Author

Number of Entries : 49

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top