மரகத நாணயம் விமர்சனம் – maragatha naanayam review Reviewed by Momizat on . மீளாக் கடனிலிருந்து மீள்வதற்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நாணயத்தை மீட்டுக் கொண்டுவர நினைக்கும் இளைஞனின் கதையே ‘மரகத நாணயம்.’ [caption id="attachment_477" மீளாக் கடனிலிருந்து மீள்வதற்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நாணயத்தை மீட்டுக் கொண்டுவர நினைக்கும் இளைஞனின் கதையே ‘மரகத நாணயம்.’ [caption id="attachment_477" Rating: 0
You Are Here: Home » சினிமா » மரகத நாணயம் விமர்சனம் – maragatha naanayam review

மரகத நாணயம் விமர்சனம் – maragatha naanayam review

மீளாக் கடனிலிருந்து மீள்வதற்காக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நாணயத்தை மீட்டுக் கொண்டுவர நினைக்கும் இளைஞனின் கதையே ‘மரகத நாணயம்.’

maragatha naanayam

மரகத நாணயம்

கதையின் நாயகனான ஆதிக்கு நாற்பது லட்சம் ரூபாய் கடன் கழுத்தை நெறிக்கிறது. அதிலிருந்து விடுபட பெரிதாக ஏதாவது செய்தாக வேண்டும் என நினைக்கிறார். அப்போது, இரும்பொறையூர் மன்னன் வைத்திருந்த மரகத நாணயத்தைத் தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் கொடுத்தால் பத்து கோடி ரூபாய் தருவதாக சீன நாட்டுக்காரர் ஒருவர் ஆதியிடம் வாக்குறுதி கொடுக்க, அந்த மரகத நாணயத்தைத் தேடி தன் நண்பர் டேனியலுடன் பயணப்படுகிறார் ஆதி. இவர்களுடைய தேடுதலுக்கு மூன்று ஆவிகள் உதவுகின்றன. மரகத நாணயம் ஆதியின் கைக்கு வந்ததா? பத்து கோடி ரூபாய் பணத்தை ஆதி பெற்றுக் கொண்டாரா? என்பதை காமடியாகச் சொல்லி, கதையை நகர்த்துகிறார் இயக்குநர் சரவன்.

 

ஒரு பேய்ப் படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை வெடியைப் பற்ற வைத்து, பட்டாசு கொளுத்தி பார்வையாளர்களை பரவசமடையச் செய்திருக்கும் இயக்குநர் சரவன் இன்றைய ரசிகர்களின் மன நிலை அறிந்து, அதற்கேற்ற திரைக்கதை அமைத்து, வெற்றி பெற்றிருக்கிறார்.

இயல்பாக, கதையின் போக்கிற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களைக் கவர்கிறார் நாயகன் ஆதி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதிக்கு தமிழில் ஒரு வெற்றிப்படம்.

கடத்தல்காரனாகவும், ஆவி புகுந்த மனிதனாகவும், சின்னச் சின்ன சேட்டைகளுடன் ராம்தாஸ் செய்கிற அலப்பறைகள் அழகு. இரண்டு வேடங்களிலும் தன்னை சிறந்த நடிகனாக நிலை நிறுத்திக் கொள்கிறார்.

நாயகி நிக்கி கல்ரானிக்கு வித்தியாசமான கதா பாத்திரம். ரவுடியின் ஆவி புகுந்த உடலோடு, ரவுடியின் மொழி பேசியே படம் முழுக்க பயணித்திருப்பது தமிழ்ச் சினிமாவுக்கு புதுசு. அதைச் செம்மையாகவும் செய்து காட்டியிருக்கிறார்.

ரவுடிக் கும்பலின் தலைவனாக வரும் ஆனந்தராஜூம் தன் பங்குக்கு காமடியில் வெளுத்து வாங்குகிறார். மேலும், ஆதியின் நண்பர் டேனியல், எம்.எஸ்.பாஸ்கர், கோட்டா சீனிவாசராவ் என அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு காமடி பேய்ப் படத்துக்கான பின்னணி இசையை சரியாக வழங்கியிருக்கிறார் திபு நினன் தாமஸ். அதுபோல் பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும் கதைக் களங்களுக்கு ஏற்ப காட்சிகளை அழுத்தமாக்குகிறது.

காமடியை மட்டுமே நம்பி கதை பயணித்திருப்பதால், படம் நெடுகிலும் யதார்த்தக் குறைபாடுகள் நிழல்போல் தொடர்கின்றன. என்றாலும், ‘மரகத நாணயம்’ மிளிரத்தான் செய்கிறது.

 மதிப்பெண்கள் 43%

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top