ரங்கூன் விமர்சனம் – Rangoon Review Reviewed by Momizat on . நேர்மையானவனுக்கு எதிராக முடிச்சிடப்படும் துரோகங்கள் தாமாகவே அறுந்துவிடும். துரோகிகள் அவர்களாகவே வீழ்ந்து மடிவார்கள் என்பதைச் சொல்கிறது ‘ரங்கூன்’. [caption id="a நேர்மையானவனுக்கு எதிராக முடிச்சிடப்படும் துரோகங்கள் தாமாகவே அறுந்துவிடும். துரோகிகள் அவர்களாகவே வீழ்ந்து மடிவார்கள் என்பதைச் சொல்கிறது ‘ரங்கூன்’. [caption id="a Rating: 0
You Are Here: Home » சினிமா » ரங்கூன் விமர்சனம் – Rangoon Review

ரங்கூன் விமர்சனம் – Rangoon Review

நேர்மையானவனுக்கு எதிராக முடிச்சிடப்படும் துரோகங்கள் தாமாகவே அறுந்துவிடும். துரோகிகள் அவர்களாகவே வீழ்ந்து மடிவார்கள் என்பதைச் சொல்கிறது ‘ரங்கூன்’.

ரங்கூன்

rangoon tamil movie

 

பால்ய வயதில் பர்மாவிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்கிறார் கௌதம் கார்த்திக். நண்பர்களோடு கால்பந்து ஆட்டம், கடற்கரை மணலில் அரட்டை என மகிழ்ச்சியாக கழியும் சிறுபிராயத்தில் தந்தையைப் பறிகொடுக்கிறார். வாழ்க்கை திசை திரும்புகிறது. வளர்ந்து இளைஞனாகிய பிறகு தங்கையைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்கிற கடமை முன் வந்து நிற்க, தகுதியான வேலையைத் தேடுகிறார். தங்கக் கடத்தல் வியாபாரி சீயான் (சித்திக்) என்பவரிடம் வேலைக்குச் சேர்கிறார்.

செய்வது கடத்தல் தொழில் என்றாலும், தன் முதலாளி சீயானின் வளர்ச்சிக்காக நேர்மையாகவும், தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் உழைக்கிறார். நற்பெயர் சம்பாதிக்கிறார். இதற்கிடையே நாயகி சனா மக்பூல் மீது காதல் அரும்புகிறது.

கௌதம் கார்த்திக்கின் துணிச்சலையும், புத்திசாலித்தனத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சீயான், மேலும் மேலும் ஆசை காட்டி, இறுதியாக மிகப்பெரிய கடத்தல் பொறுப்பை ஒப்படைக்கிறார். அதைச் சரியாகச் செய்து முடித்துவிட்டால், வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்கிற கனவோடு வேலையைத் துவங்குகிறார் கௌதம் கார்த்திக். ஆனால், முதலாளி சீயானின் துரோகத்தாலும், நண்பனின் கூட்டுச் சதியாலும் வீழ்ச்சியைச் சந்திக்கிறார். அதன் பின் மீண்டு எழுந்தாரா? அவருடைய வாழ்க்கை என்னவாயிற்று என்பதைச் சொல்கிறது ‘ரங்கூன்.’

 

  • “பிறப்பதும், இறப்பதும் சுலபம். இதற்கு நடுவில் வாழ்வதுதான் கஷ்டம்”.
  • “பணம் நிஜமல்ல… நிஜம் மாதிரி.”
  • “அப்பாவோட உண்மையான பாசத்தையும், பொய்யான கோபத்தையும் அப்புறமா நான் பாக்கல.”
  • “பெரிய முடிவெடுக்க சின்ன நேரம் போதும்.”

இப்படியான வசனங்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

நடிப்பிலும், நடனத்திலும், சண்டையிலும் கௌதம் கார்த்திக்கிடம் நல்ல முதிர்ச்சி. ஏமாற்றத்தை எதிர்கொள்ளும்போதும், துரோகத்தை சந்திக்கும்போதும் சராசரி மனிதனின் முகத்தில் எந்த ரியாக்ஷன் வருமோ, அதை அப்படியே வெளிக்காட்டி அசத்தியிருக்கிறார்.

காதலியாக வரும் சனாவுக்கு திறமையை வெளிக்காட்டும் அளவுக்கு காட்சிகள் இல்லையென்றாலும், கிடைத்த காட்சிகளில் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார்.

துரோகத்தை மனதுக்குள் வைத்துக்கொண்டு நம்பிக்கையை முகத்தில் காட்டி, மலையாள வாடையோடு தமிழ் பேசும் வில்லன் சித்திக், இனி தமிழ்ப் படங்களில் அதிகம் தென்படக்கூடிய நடிகராக வலம் வருவார்.

கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் கேசவன் (ஆனந்த்) பாத்திரத்தை இன்னும் மெருகூட்டியிருக்கலாம்.

சொல்ல வந்த கதையை அதிகச் சிரமங்கள் இல்லாமல், தெளிவான திரைக்கதையோடு காட்சியை நகர்த்திய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டுகள்.

இயல்பை மீறாத சண்டைக்காட்சிகள், காட்சிகளை அழுத்தமாக உள்வாங்கி வெளிப்படுத்திய ஒளிப்பதிவு, பரபரப்பான காட்சி நகர்வுகளின்போது விறுவிறுப்பான பின்னணி இசை என இயக்கத்திற்கு துணை நிற்கின்றன மற்ற தொழில்நுட்பங்கள்.

மொத்தத்தில் சலிப்பைக் கொடுக்காமல் நகர்ந்து செல்கிறது ‘ரங்கூன்.’

மதிப்பெண்கள் 43%

 

 

 

 

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top