ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம் – oru kidayin karunai manu review Reviewed by Momizat on . விபத்துகளும், திடீர் நிகழ்வுகளும் வாழ்க்கையின் போக்கையே திசை மாற்றிவிடும் என்பதைச் சொல்கிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு”. “என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுத்தா விபத்துகளும், திடீர் நிகழ்வுகளும் வாழ்க்கையின் போக்கையே திசை மாற்றிவிடும் என்பதைச் சொல்கிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு”. “என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுத்தா Rating: 0
You Are Here: Home » சினிமா » ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம் – oru kidayin karunai manu review

ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம் – oru kidayin karunai manu review

விபத்துகளும், திடீர் நிகழ்வுகளும் வாழ்க்கையின் போக்கையே திசை மாற்றிவிடும் என்பதைச் சொல்கிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு”.

“என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொடுத்தால், நான் உனக்கு இதைச் செய்து தருகிறேன்” என தன் குலசாமியோடு யாவாரம் பேசும் கிராமத்து ஜனங்களின் வாழ்வியலைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொள்கிறது.

oru kidayin karunai manu

“பேரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தால், உனக்கு ஒரு கிடாயைப் பலிகொடுக்கிறேன்” என குலசாமியிடம் வேண்டிக்கொண்ட பாட்டியின் வேண்டுதல் நிறைவேறியதால், பேரனுக்கு திருமணம் முடிந்த மூன்றாம் நாள், ஊர் மக்களையும், புதுமணத் தம்பதிகளையும், பலி கொடுப்பதற்காக நேர்ந்துவிடப்பட்ட கிடாயையும் ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு, குலசாமி இருக்கும் ஊரை நோக்கி பயணமாகிறாள் பாட்டி.

 

வெகு தொலைவில் உள்ள குலசாமி கோயிலுக்கு லாரியில் ஆனந்தமாகப் பயணிக்கிறார்கள் ஊர் ஜனங்கள். திடீரென்று லாரியில் ஓர் இளைஞர் அடிபட்டு சாகிறார். பயணம் தடைபடுகிறது. அதைத் தொடர்ந்து பல சிக்கல்கள் உருவாகின்றன. அத்தனைச் சிக்கல்களையும் களைந்து பாட்டியின் வேண்டுதல் நிறைவேறியதா? அந்தக் கிடா பலி கொடுக்கப்பட்டதா? என்பதே திரைக்கதை.

முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. ஒரு நிகழ்வை தங்களின் அறியாமையால் விபத்தாக கற்பனை செய்துகொள்ளும் கிராமத்து வெள்ளந்தி மக்களின் வாழ்க்கையையும், அவர்களுக்குள் இருக்கிற பொறாமை, பாசம், காதல், அக்கறை என நவரசங்களையும் முதல் படத்திலேயே முத்தாய்ப்பாக எடுத்துரைத்திருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள்.

“தவறு செய்தவன் நானே. எனவே, தண்டனைக்குரியவனும் நானே” என விதார்த் மருகும் காட்சிகள், மனசாட்சியின் குரலாக ஒலிக்கிறது. அதுபோல், எனக்கு 35 வயசுன்னு யார் சொன்னா?” என கோபம் காட்டும் இடத்திலும் கைதட்டல் பெறுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படம் விதார்த்தின் மார்கெட் நிலவரத்தை சரிசெய்திருக்கிறது.

நாயகி ரவீணா ரவி சரியான தேர்வு. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பெல்லாம் தேவையான இடங்களில் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கொண்டியாக வரும் பாலா, சேவல் மாஸ்டராக வரும் சித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, மாமனாராக கோபத்தையும் பாசத்தையும் காட்டும் ஜெயராஜ், லாரி டிரைவராக வரும் வீரசமர்,  லாரி உரிமையாளர் செல்வமுருகன், விதார்த் பெரியப்பாவாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன், வழக்கறிஞராக நடித்திருக்கும் ஜார்ஜ் என அத்தனை  பேரும் தங்களின் பாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

ஒரு கிடாயின் பார்வையில் படத்தின் முதல் காட்சியை காட்டியிருப்பது வித்தியாசமான, அழகான முயற்சி.

லாரியில் அடிப்பட்டு இறந்த இளைஞன் மேல் எந்தக் காயமும் இல்லை. அப்படியென்றால், அது விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்பதைக்கூட அறிய முடியாதவர்களா கிராமத்து மக்கள்?  ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு, கொஞ்சம்கூட பயமில்லாமல், அவர்கள் இஷ்டத்திற்கு செயல்படுவதும், அதே இடத்தில் சமையலாக்கி சாப்பிடுவதும் காட்சியை நகர்த்தி செல்ல உதவும் எதார்த்தமில்லாத காட்சிகள். இதுபோன்ற குறைகள் இருந்தாலும், மனதில் நிற்கிறது ‘ஒரு கிடாயின் கருணை மனு’.

மதிப்பெண்கள் 46%

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top