சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம் – sangili pungili kathava thora review Reviewed by Momizat on . எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ முடியாமல் செத்துப்போன மனிதரின் ஆவிக்கும், எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் இளைஞனுக்கும் இடையே நடக்கிற யுத்தமே ‘சங எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ முடியாமல் செத்துப்போன மனிதரின் ஆவிக்கும், எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் இளைஞனுக்கும் இடையே நடக்கிற யுத்தமே ‘சங Rating: 0
You Are Here: Home » சினிமா » சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம் – sangili pungili kathava thora review

சங்கிலி புங்கிலி கதவ தொற விமர்சனம் – sangili pungili kathava thora review

எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ முடியாமல் செத்துப்போன மனிதரின் ஆவிக்கும், எதிர்பார்த்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க ஆசைப்படும் இளைஞனுக்கும் இடையே நடக்கிற யுத்தமே ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் கதைக் கரு. இதை காமடி முலாம் பூசி திரைக்கதையாக நமக்குத் தந்திருக்கிறார் இயக்குநர் ஐக்.

sangili pungili kathava thora

sangili pungili kathava thora

சிறு வயது முதலே வாடகை வீட்டில் வசித்து வந்து, அதனால் ஏற்பட்ட அவமானங்களையும், வலிகளையும் துடைத்தெறிய, எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கிவிட வேண்டும். அந்த வீட்டில் தன் அம்மாவை குடியமர்த்தி, ராணிபோல் பார்க்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் உழைத்து வரும் ஜீவா (படத்தில் வாசு), தான் விரும்பியதுபோலவே ஒரு மாளிகை வீட்டை வாங்க முடிவெடுக்கிறார். ஆனால், வீட்டின் விலையோ மிக அதிகம். எனவே, விலையைக் குறைத்து வாங்கவேண்டும் என்பதற்காக, அந்த வீட்டில் பேய் இருப்பதுபோல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, வீட்டை யாருமே வாங்க விடாமல் தடுத்து, இறுதியாக, தான் விரும்பிய விலைக்கே  அந்த மாளிகையை வாங்கி, அங்கே அம்மாவோடு குடியேறுகிறார்.

ஆனால், “இந்த வீடு எனக்குச் சொந்தமானது. நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்த வீட்டை வாங்கியிருக்கிறீர்கள். எனவே, இந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க முடியாது” என ஜீவாவையும்,  அம்மாவையும் விரட்ட முனைகிறார் அங்கே ஏற்கனவே குடியிருந்து வரும் தம்பி ராமையா.

ஒரு வழியாக பஞ்சாயத்து பேசி, இரண்டு குடும்பத்தாரும் அதே வீட்டில் தனித்தனியாக வசித்துக் கொள்ள முடிவெடுக்கப்படுகிறது. ஆனால், ஒருவரை ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான திட்டமும் மறைமுகமாக நடத்தப்படுகிறது.

வீட்டை குறைந்த விலையில் வாங்குவதற்காக எப்படி பேய் நாடகத்தை அரங்கேற்றினாரோ, அதே பாணியை மீண்டும் கடைபிடித்து, வீட்டில் பேய் இருக்கிறது என்பதற்கான நாடகங்களை மீண்டும் அரங்கேற்றி, தம்பி ராமையாவை வீட்டை விட்டு வெளியேற வைக்கிறார் ஜீவா. இந்த பேய் நாடகத்திற்கு ஜீவாவிற்கு உதவி செய்கிறார் சூரி. இதற்கிடையில் தம்பி ராமையாவின் மகள் ஸ்ரீதிவ்யாவுக்கும் ஜீவாவுக்கும் காதல் அரும்பிக் கொள்கிறது.

தம்பி ராமையா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அந்த வீட்டில் நிஜமாகவே பேய் இருக்கிற விஷயம் தெரிய வருகிறது ஜீவாவிற்கு. மீண்டும் தம்பி ராமையாவை வீட்டிற்கு அழைத்து வந்து, இரண்டு குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தால், அந்தப் பேய், வீட்டைவிட்டு வெளியேறிவிடும் என குறி சொல்கிறார் கோவை சரளா.

ஜீவாவின் சமாதான அழைப்பை ஏற்று தம்பி ராமையா மீண்டும் அந்த வீட்டில் வசிக்க முடிவெடுத்தாரா, இரண்டு குடும்பத்தாரும் ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்களா என்பதைச் சொல்கிறது க்ளைமாக்ஸ்.

இது திகில் படமா இல்லை நகைச்சுவைப் படமா என்கிற கேள்விக்கு எவரும் பதில் சொல்ல முடியாதபடிக்கு, இரண்டையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் இயக்குநர் ஐக்.

 • பேய்ப்படங்களில் லாஜிக் பார்க்கக்கூடாது என்கிற பொதுவான சினிமா விதியை இந்தப் படமும் மீறவில்லை.
 • ஜீவாவின் அம்மாவாக வரும் ராதிகாவின் நடிப்புக்கு சபாஷ்.
 • வழக்கமான தமிழ்ச் சினிமா நாயகிக்கான வேடத்தை, எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் அப்படியே செய்து முடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
 • சூரியின் காமடிகளில் சில ரசிக்கும்படியாகவே இருக்கின்றன.
 • தம்பி ராமையாவின் இரட்டை அர்த்த வசனங்கள், குடும்பத்தோடு படம்பார்க்க வருபவர்களை முகம் சுழிக்க வைக்கும்.
 • பேய்ப் படத்திற்கான பின்னணி இசையை சிறப்பாகவே வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் விசால் சந்திரசேகர்.
 • சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவு பாராட்டும்படியாக இருக்கிறது.
 • இயக்குநர் சொன்னதுபோலவே தனக்கான பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் ஜீவா.
 • வழக்கமான பேய்க் கதை என்பதாலும், நம்பும்படியான காட்சி அமைப்புகள் இல்லை என்பதாலும், படத்தோடு முழுமையாக ஒன்ற முடியவில்லை.
 • பேயாக வரும் ராதாரவியால் எவ்வித பயமும் வரவில்லை.
 • ஜீவா, ஸ்ரீதிவ்யா காதலில் அழுத்தம் இல்லை.
 • காமடிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், அதுவே படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.

மதிப்பெண்கள் 38%

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top