லஞ்சம் கொடுப்பதற்காக தடம் மாறும் இளைஞர்களின் கதை பிச்சுவா கத்தி – pichuvakathi Reviewed by Momizat on . தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது பிச்சுவா கத்தி. காக்கவும், அழிக்கவும் பயன்படும் பிச்சுவா கத்தியை, தனது முதல் படத்திற்கான தலைப்பாக வைத்து, ரசிகர்களின் எ தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது பிச்சுவா கத்தி. காக்கவும், அழிக்கவும் பயன்படும் பிச்சுவா கத்தியை, தனது முதல் படத்திற்கான தலைப்பாக வைத்து, ரசிகர்களின் எ Rating: 0
You Are Here: Home » சினிமா » லஞ்சம் கொடுப்பதற்காக தடம் மாறும் இளைஞர்களின் கதை பிச்சுவா கத்தி – pichuvakathi

லஞ்சம் கொடுப்பதற்காக தடம் மாறும் இளைஞர்களின் கதை பிச்சுவா கத்தி – pichuvakathi

லஞ்சம் கொடுப்பதற்காக தடம் மாறும் இளைஞர்களின் கதை பிச்சுவா கத்தி – pichuvakathi

தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையது பிச்சுவா கத்தி. காக்கவும், அழிக்கவும் பயன்படும் பிச்சுவா கத்தியை, தனது முதல் படத்திற்கான தலைப்பாக வைத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு வித்திட்டிருக்கிறார் இயக்குநர் ஐயப்பன். இவர் இயக்குநர் சுந்தர்.சியிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர்.

பிச்சுவா கத்தி

pichuvakathi

நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன், சஸ்பென்ஸ் என தனது முதல் படத்தை இயக்கி முடித்திருக்கும் ஐயப்பனிடம் படத்தின் கதை பற்றி கேட்டபோது, சிறு தவறுக்காக காவல் துறையால் கைது செய்யப்படும் மூன்று இளைஞர்களிடம் கணிசமான தொகையை லஞ்சமாகக் கேட்கிறார் காவல்துறை ஆய்வாளர். கையில் பணமில்லாத அந்த இளைஞர்கள், லஞ்சப் பணத்தை  தவறான வழியில் சம்பாதித்து, காவல் துறை ஆய்வாளரிடம் கொடுக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவர்களின் வாழ்க்கை சூனியம் கொள்கிறது. ஒரு தவறைத் தொடர்ந்து மேலும் மேலும் பல தவறுகளைச் செய்கின்ற அந்த இளைஞர்களில், தங்களின் தவறுகளை உணர்ந்து ஒரு கட்டத்தில் திருந்துகின்றனர். அவர்களைத் திருத்துவது யார், எந்தச் சூழல்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறேன்” என்கிறார்.

பிச்சுவாக்கத்தி

இனிகோ பிரபாகரன்

‘பிச்சுவா கத்தி’ படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கிறது. படத்தின் நாயகனாக இனிகோ பிரபாகரன் நடிக்க, மற்றொரு நாயகனாக செங்குட்டுவன் களமிறங்கியிருக்கிறார். மேலும், தமிழ்ச் சினிமாவின் முன்னணி காமெடியன்களாக தற்போது வலம் வரும்  ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், காளிவெங்கட், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.  நாயகிகளாக ஸ்ரீபிரியங்காவும், அனிஷாவும்.

இசை-என். ஆர். ரகுநந்தன்

ஒளிப்பதிவு- கே.ஜி. வெங்கடேஷ்

எடிட்டிங்- எஸ்.பி. ராஜசேதுபதி

பாடல்கள்- யுகபாரதி

ஸ்டண்ட்- ஹரிதினேஷ், சுப்ரிம் சுந்தர்.

தயாரிப்பு- சி.மாதையன்

இயக்கம்- ஐயப்பன்

0
0

Summary:

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top