எம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்கத்தில் வெளிவரும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – sangili pungili kathava thora Reviewed by Momizat on . இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாளராகப் பணிபுரிந்துவிட்டு, பின்னர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஐக், முதன் முதலாக இயக்கியி இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாளராகப் பணிபுரிந்துவிட்டு, பின்னர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஐக், முதன் முதலாக இயக்கியி Rating: 0
You Are Here: Home » சினிமா » எம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்கத்தில் வெளிவரும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – sangili pungili kathava thora

எம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்கத்தில் வெளிவரும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – sangili pungili kathava thora

எம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்கத்தில் வெளிவரும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ – sangili pungili kathava thora

இயக்குநர் பிரியதர்ஷனிடம் உதவியாளராகப் பணிபுரிந்துவிட்டு, பின்னர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஐக், முதன் முதலாக இயக்கியிருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற.’

 

ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்’ உடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார் இயக்குநர் அட்லீ. ‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அட்லீ, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகியிருப்பது, தமிழ்ச் சினிமாவிற்கு புதியவர்களை மேலும் அடையாளப்படுத்தும்.

sangili pungili kathava thora

சங்கிலி புங்கிலி கதவ தொற

தமிழ்ச் சினிமாவின் அக்ஷய்குமார் என அழைக்கப்படும் ஜீவா நாயகனாக நடிக்க, ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கிறார்.

சங்கிலி புங்கிலி கதவ தொற

சங்கிலி புங்கிலி கதவ தொற

திரையில்…

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா சரத்குமார், கோவை சரளா, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி, இளவரசு, தேவதர்ஷினி, வாசு விக்ரம் மற்றும் பலர்.

 

திரைக்குப் பின்னால்…

தயாரிப்பு : ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் அட்லி (ஏ ஃபார் ஆப்பிள்)

எழுத்தும் இயக்கமும் : ஐக்

இசை : விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு : சத்தியன் சூரியன்

படத்தொகுப்பு : T.S.சுரேஷ்

தயாரிப்பு வடிவமைப்பு :லால்குடி இளையராஜா

சண்டைப் பயிற்சி : திலீப் சுப்பராயன்

பாடல்கள் : நா.முத்துக்குமார், பா.விஜய், விவேக், அருண்ராஜா காமராஜ்

 

  • படத்தின் இயக்குநர் ஐக் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரன்.
  • சிம்பு, அனிருத், ஜி.வி.பிரகாஷ்குமார், கங்கை அமரன், பிரேம்ஜி ஆகியோர் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.
  • குழந்தைகளை மகிழ்விக்கும் பேய்ப் படமாக சங்கிலி புங்கிலி கதவ தொற இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் அட்லீ.
  • “வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதோடு, ஒரு திரைப்படத்தை இயக்கிப்பார் என்கிற வாசகத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்” எனச் சொல்கிறார் படத்தின் இயக்குநர் ஐக்.
  • படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, தனது சிஷ்யன் இயக்குநர் ஐக்கை வாழ்த்திப் பேசினார் கமல்ஹாசன்.
  • சுவாமி நித்யானந்தரின் கெட்டப்பில் வருகிறார் பரோட்டா சூரி.

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top