அனைவரையும் ஈர்க்கும் வகையில் ‘தப்பு தண்டா’ திரைப்படம் Reviewed by Momizat on . கவர்ந்திழுக்கும் சரியான தலைப்பு, ஒரு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் அதிகரித்துவிடும் என்பதை அண்மையில் மெய்ப்பித்திருக்கும் படம் ‘தப்பு தண்டா’. கவர்ந்திழுக்கும் சரியான தலைப்பு, ஒரு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் அதிகரித்துவிடும் என்பதை அண்மையில் மெய்ப்பித்திருக்கும் படம் ‘தப்பு தண்டா’. Rating: 0
You Are Here: Home » சினிமா » அனைவரையும் ஈர்க்கும் வகையில் ‘தப்பு தண்டா’ திரைப்படம்

அனைவரையும் ஈர்க்கும் வகையில் ‘தப்பு தண்டா’ திரைப்படம்

அனைவரையும் ஈர்க்கும் வகையில் ‘தப்பு தண்டா’ திரைப்படம்

கவர்ந்திழுக்கும் சரியான தலைப்பு, ஒரு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் அதிகரித்துவிடும் என்பதை அண்மையில் மெய்ப்பித்திருக்கும் படம் ‘தப்பு தண்டா’.

தயாரிப்பாளர் சத்யமூர்த்தியின் ‘க்ளாப் போர்ட்’ பட நிறுவனம் சார்பாக, ஸ்ரீகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தப்பு தண்டா’ வின் நாயகன் சத்யா. நாயகி சுவேதா கய்.

 

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விசாரணை’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகர் அஜய் கோஷ் ‘தப்பு தண்டா’ படத்தின் மூலமாக தமிழ் திரைப்பட உலகுக்குள்

தப்புத் தண்டா

தப்பு தண்டா

நேரடியாக நுழைகிறார். படத்தின் ஒளிப்பதிவை வினோத் மேற்கொள்ள, இசையமைத்திருப்பவர் நரேன் பாலகுமார்.

ajai kosh

அஜய்கோஷ்

‘தப்பு தண்டா’வின் இசை வெளியீட்டு விழாவில் அனைவரது கவனத்தையும் தனது வெள்ளந்தியான பேச்சு மூலம் ஈர்த்தார் அஜய் கோஷ். “இந்தியத் திரைத் துறையைப் பொருத்தமட்டில் திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களையும், விசாலமான மனது படைத்த பார்வையாளர்களையும் கொண்டிருப்பது தமிழ்த் திரையுலகம்தான். அதனால்தான், தமிழ்த் திரையுலகத்தை இந்தியத் திரையுலகம் எப்போதும் ஆச்சரியமாகவே பார்க்கிறது. ‘விசாரணை’ படத்தின் மூலமாக எனக்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தவர்கள் தமிழ் ரசிகர்கள்தான். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘விசாரணை’ திரைப்படத்தில் நானும் ஓர் அங்கம் என்பதை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், என் உள்ளத்தில் எழும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதற்குக் காரணமான தமிழ் ரசிகர்களை என் வாழ்நாள் உள்ள வரையில் மறக்கமாட்டேன். தமிழ் திரையுலகம் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கும்பட்சத்தில், இங்கேயே சொந்த வீடு வாங்கி, இங்கேயே செட்டில் ஆக ஆசைப்படுகிறேன். ‘தப்பு தண்டா’ படத்தில் எனக்கு போலீஸ் வேடம். என் திறமைக்கு சவால் விடும் வகையில் எனக்கான கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகண்டன். இந்தப் படத்திற்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகண்டன் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருவார்” என்கிறார் உணர்ச்சிப் பெருக்கோடு அஜய்கோஷ்.

படத்தின் இயக்குநர் ஸ்ரீகண்டன் பேசும்போது, “இது ஒரு த்ரில்லர் படமாக இருந்தாலும், எல்லாத் தரப்பினரையும் கவரக்கூடியதாகவே இருக்கும். ஒரு கொலையை மையமாக வைத்து, படத்தின் திரைக்கதை நகர்கிறது” என நாசுக்காக படத்தின் கதையையும் நம்மிடம் பகிர்ந்தார்.

0
0

Summary:

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top