அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கவிருக்கும் இயக்குநர் அட்லீ – Reviewed by Momizat on . சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்பவர்களால்தான், தமிழ்ச் சினிமாவின் மூச்சு இன்றைக்கும் ஆரோக்கியமாக இருக்கிறது. [caption id="attachment_452" align சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்பவர்களால்தான், தமிழ்ச் சினிமாவின் மூச்சு இன்றைக்கும் ஆரோக்கியமாக இருக்கிறது. [caption id="attachment_452" align Rating: 0
You Are Here: Home » சினிமா » அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கவிருக்கும் இயக்குநர் அட்லீ –

அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கவிருக்கும் இயக்குநர் அட்லீ –

அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கவிருக்கும் இயக்குநர் அட்லீ –

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்பவர்களால்தான், தமிழ்ச் சினிமாவின் மூச்சு இன்றைக்கும் ஆரோக்கியமாக இருக்கிறது.

தயாரிப்பாளர் அட்லீ

producer atlee

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றி, ஏ.ஆர்.முருகதாஸிடம் கதை சொல்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலமாக முதல் வாய்ப்பிலேயே திறமையான இயக்குநர் என இரசிகர்களிடம் பெயர் பெற்றவர் அட்லீ. ‘ராஜா ராணி’யைத் தொடர்ந்து விஜய்யை நாயகனாக வைத்து இவர் இயக்கிய ‘தெறி’ படமும் வசூலில் சாதனை புரிய, தனது மூன்றாவது படமாக மீண்டும் விஜய்யை வைத்து ‘விஜய் 61’ என்கிற படத்தை இயக்கி வருகிறார் அட்லீ.

producer atlee

தயாரிப்பாளர் அட்லீ

ஓர் இயக்குநராக பரபரப்பான வேலைகளில் மூழ்கியிருந்தாலும், திறமையான புதியவர்களுக்கு தமிழ்ச் சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்திக்  கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ‘ஏ ஃபார் ஆப்பிள்’ என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கி, முதல் தயாரிப்பாக, ஐக் இயக்கத்தில், ஜீவா – ஸ்ரீதிவ்யா நடிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து முடித்திருக்கும் அட்லீ, மேலும் பல படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.

 

இரண்டாவது தயாரிப்பாக தன்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தையும், மூன்றாவது தயாரிப்பாக தன்னுடைய குழுவில் திரைக்கதையாசிரியராக இருக்கும் அசோக் இயக்கும் படத்தையும் தயாரிக்க முடிவெடுத்திருக்கிறார் அட்லீ. “இந்தப் படங்களின் தயாரிப்பு விபரங்கள் யாவற்றையும் ஜூன் மாதத்தில் அதிகார பூர்வமாக வெளியிடுவேன்” என்கிறார் அட்லீ.

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top