பீச்சாங்கை திரைப்படம் – Peechaangai Reviewed by Momizat on . வலதுகை பழக்கம் உடையோரைவிட, இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆளுமை உண்டு. விளையாட்டு வீரர்களில் தொடங்கி எல்லாத் துறை சார்ந்தவர்களிலும் இடதுகை பழக்கம் உள்ளவர வலதுகை பழக்கம் உடையோரைவிட, இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆளுமை உண்டு. விளையாட்டு வீரர்களில் தொடங்கி எல்லாத் துறை சார்ந்தவர்களிலும் இடதுகை பழக்கம் உள்ளவர Rating: 0
You Are Here: Home » சினிமா » பீச்சாங்கை திரைப்படம் – Peechaangai

பீச்சாங்கை திரைப்படம் – Peechaangai

பீச்சாங்கை திரைப்படம் – Peechaangai

வலதுகை பழக்கம் உடையோரைவிட, இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆளுமை உண்டு. விளையாட்டு வீரர்களில் தொடங்கி எல்லாத் துறை சார்ந்தவர்களிலும் இடதுகை பழக்கம் உள்ளவர்களின் திறமை வலதுகை பழக்கம் உள்ளவரைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும். இதை கதைக் கருவாக வைத்து உருவாகியிருக்கிறது ‘பீச்சாங்கை’ திரைப்படம்.

பீச்சாங்கை peechaangai

பீச்சாங்கை தமிழ் திரைப்படம்

கலைஞர் தொலைக் காட்சி நடத்திய நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்குபெற்று, வெற்றிபெற்ற அசோக், வெற்றிக்குக் காரணமாக விளங்கிய அதே கதையை முழுநீள திரைப்படத்துக்கான திரைக்கதையாக மாற்றி ‘பீச்சாங்கை’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

 

கதையின் நாயகன் இடது கைப் பழக்கம் கொண்டவன். அவனது திருட்டுத் தொழிலுக்கு இடது கையின் செயல்பாடுகள் லாவகமாக உதவுகின்றன. எவரிடமும் மாட்டிக்கொள்ளாமல் வெற்றிகரமாக தனது தொழிலைச் செய்துவருகிறான். ஆனால், ஒருகட்டத்தில் அவனது இடது கை செயல்பட மறுக்கிறது. சிறப்பாக ஒத்துழைத்த இடக்கை திடீரென செயல்பட மறுப்பதால், அவனது வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் அசோக்.

 

பீச்சாங்கை படத்தை ‘கர்ஸா எண்ட்டெர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர்.எஸ். கார்த்திக் மற்றும் ‘பி.ஜி.மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி.ஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி ராவ் ஆகிய இருவரும் புதுமுகங்கள். மேலும், தொழிற்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் ராஜேந்திரன், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, எடிட்டிங் ஜோமின் ஆகியோரும் இப்படத்தின் மூலமாக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைக்கின்றனர்.

 

பீச்சாங்கை படத்தின் இயக்குநர் அசோக் நம்மிடம் பேசும்போது, “திரைத்துறையில் வெற்றி பெற புதியகோணத்தில் கதை சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதை சுவாராஸ்யமாக காட்ட  விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருக்க வேண்டும். இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும் அப்படிப்பட்டது. எனவே, 2017ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ‘பீச்சாங்கை’ நிச்சயமாக இடம்பெறும் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

0
0

Summary:

About The Author

Number of Entries : 171

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top