பவர் பாண்டி விமர்சனம் – power pandi review – மதிப்பெண்கள் 47% Reviewed by Momizat on . நடிகனாக மட்டுமல்ல, இயக்குநராகவும் தன்னால் திரைத்துறையில் வெற்றி பெற முடியும் என ‘ப.பாண்டி’ (பவர் பாண்டி) மூலமாக நிரூபித்திருக்கிறார் தனுஷ். [caption id="attachm நடிகனாக மட்டுமல்ல, இயக்குநராகவும் தன்னால் திரைத்துறையில் வெற்றி பெற முடியும் என ‘ப.பாண்டி’ (பவர் பாண்டி) மூலமாக நிரூபித்திருக்கிறார் தனுஷ். [caption id="attachm Rating: 0
You Are Here: Home » சினிமா » பவர் பாண்டி விமர்சனம் – power pandi review – மதிப்பெண்கள் 47%

பவர் பாண்டி விமர்சனம் – power pandi review – மதிப்பெண்கள் 47%

பவர் பாண்டி விமர்சனம் – power pandi review – மதிப்பெண்கள் 47%

நடிகனாக மட்டுமல்ல, இயக்குநராகவும் தன்னால் திரைத்துறையில் வெற்றி பெற முடியும் என ‘ப.பாண்டி’ (பவர் பாண்டி) மூலமாக நிரூபித்திருக்கிறார் தனுஷ்.

power pandi

பவர் பாண்டி

சினிமாவில் வெற்றிகரமான சண்டைப் பயிற்சியாளராக வலம் வந்து, ஒரு கட்டத்தில் அதிலிருந்து ஓய்வு பெற்று, மகன் வீட்டில் வசித்துவரும் ராஜ்கிரண் (பவர் பாண்டி), தன் பேரனையும் பேத்தியையும் கொஞ்சிக் களித்தபடியே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

 

ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் 64 வயதிலும் அன்றாடம் நடைப் பயிற்சி, உடற் பயிற்சி என தேகத்தை முறுக்குக் கம்பியாக வைத்திருக்கும் ராஜ்கிரண் சமூக அவலங்களைத் தயக்கம் இல்லாமல், நேர்மையின் துணை கொண்டு தட்டிக் கேட்கிறார். இதனால் உருவாகும் சில பிரச்சினைகள் மகனுக்கும் (பிரசன்னா) ராஜ்கிரணுக்கும் மனக் கசப்பினை ஏற்படுத்த, தன் சேமிப்பு பணத்தை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, வனாந்தரியாக பயணம் மேற்கொள்கிறார்.

 

அந்தப் பயணத்தின் இடைவெளியில் சந்திக்கும் சில மனிதர்கள் அவருடைய இளவயது காதலை ஞாபகப்படுத்த, வனாந்தரியின் பயணம் காதலி வசிக்கும் ஊர் நோக்கித் திரும்புகிறது. காதலியைச் சந்திக்கும் ராஜ்கிரணின் நடவடிக்கைகள் எப்படி மாறுகின்றன, காதலியால் அவரை மீண்டும் ஏற்றுக் கொள்ள முடிந்ததா? இருவரும் இணைந்து வாழ முடியுமா? என்கிற கேள்விகளுக்கு எவ்வித புனைவுகளும் சேர்க்காமல், எதார்த்தமாக பதில் சொல்லி படத்தை முடித்திருக்கிறார் தனுஷ்.

 

கதையும், கதையை அடுக்கடுக்கான காட்சிகளாக நகர்த்திச் செல்லும் திரைக்கதையும், திரைக்கதைக்கு களங்கம் விளைவிக்காத ஒளிப்பதிவும், காட்சிகளோடு ஒன்றச் செய்யும் இசையும் ‘பவர் பாண்டி’யின் வெற்றிக்கு நிறையவே பலம் சேர்த்திருக்கின்றன.

 

பார்வையாளனுக்கு ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுகளைக் கொடுத்து, அதன் மூலமாக உணர்ச்சியை வெளிக் கொணர்கிற எந்த திரைப்படமும் தோற்றுப்போகாது. பவர் பாண்டியில் இதுபோன்ற காட்சிகளே மிகுதி.

 

இயலாமை, பரிதவிப்பு, ஒதுக்கப்படுதல், முன்னுரிமை இல்லாமை, உதாசீனப்படுத்தப்படுதல், தன் விருப்பத்தை வெளிக்காட்ட உரிமை இல்லாது போதல் என முதுமையில் ஒவ்வொரு மனிதரும் சந்திக்கும் வாழ்வியல் சிக்கல்களை மிக இயல்பாக நடித்துக் காட்டியிருக்கும் ராஜ்கிரணுக்கு இந்தப் படம் மீண்டும் ஒரு கிரீடத்தை சூட்டியிருக்கிறது.

 

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ரேவதியின் நடிப்புப் பசிக்கு தீனி போட்டிருக்கிறது ‘பவர் பாண்டி’. தனக்கான எல்லாக் காட்சியிலும் பார்வையாளனை கட்டிப்போடுகிறார். ஒருமையில் உரிமையோடு காதலனை அழைக்கும்போது அவர் காட்டுகிற முகபாவணை, “இங்க வந்து செத்துப் போயிராத” எனச் சொல்லும்போது முகத்தில் காட்டுகிற பரிதவிப்பு என, தன்னைவிட்டால் இந்தக் கேரக்டரை எவராலும் பூர்த்தி செய்திருக்க முடியாது என்பதைச் சொல்லாமல் செய்து காட்டியிருக்கிறார்.

ப்ளாஷ்பேக் காட்சியில் பவர் பாண்டியாக தனுஷ், பூந்தென்றலாக மடோனா செபாஸ்டியன். இருவருமே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, பூந்தென்றல் ஊரைவிட்டுக் கிளம்பும் காட்சியில் ஒளிந்திருந்து பார்க்கும் தனுஷின் நடிப்பு சில காட்சிகளே என்றாலும், மனதில் நிற்கிறது.

 

தனியாக இல்லாமல், திரைக்கதையோடு பயணிக்கும் காமடிக் காட்சிகள் சோடை போகவில்லை.

 

பாசமுள்ள மகனாக இருந்தும், அதை வெளிக்காட்ட நேரமின்றி, வேலையிலேயே கவனமாக இருக்கும் பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார் பிரசன்னா.  ஆனால், ராஜ்கிரண் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, பிரசன்னா தன் மனைவியிடம் பேசும் வசனங்கள் ஓவர் டோஸ். அந்தக் காட்சிக்கு வசனமே தேவையில்லை. அல்லது, வசனத்தின் நீளத்தையாவது குறைத்திருக்கலாம்.

க்ளைமாக்ஸ் காட்சி மனதை கட்டிப் போடுகிறது.

தான் இயக்கப் போகும் முதல் திரைப்படம் எல்லோரையும் கவர்ந்திழுக்க, அதற்கான கதைக் களம் எதுவாக இருக்க வேண்டும், காட்சி அமைப்புகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை கவனமாக ஆராய்ந்து, திரைக்கதையை தொய்வில்லாமல் அமைத்து  ‘பவர் பாண்டி’ மூலமாக இயக்குநராகவும் வெற்றி கண்டிருக்கிறார் தனுஷ்.

மதிப்பெண்கள் 47%

0
0

Summary:

About The Author

Number of Entries : 171

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top