8 தோட்டாக்கள் – 8 thottaakkal – 8 thotaakal tamil film Reviewed by Momizat on . சில படங்களின் டீஸரைப் பார்க்கும்போதே, இது வெற்றிப் படமாக இருக்கும். தரமான படமாக இருக்கும். பார்வையாளனின் பணத்திற்கு மதிப்பு கொடுக்கிற படமாக இருக்கும் என்கிற எதி சில படங்களின் டீஸரைப் பார்க்கும்போதே, இது வெற்றிப் படமாக இருக்கும். தரமான படமாக இருக்கும். பார்வையாளனின் பணத்திற்கு மதிப்பு கொடுக்கிற படமாக இருக்கும் என்கிற எதி Rating: 0
You Are Here: Home » சினிமா » 8 தோட்டாக்கள் – 8 thottaakkal – 8 thotaakal tamil film

8 தோட்டாக்கள் – 8 thottaakkal – 8 thotaakal tamil film

8 தோட்டாக்கள் – 8 thottaakkal – 8 thotaakal tamil film

சில படங்களின் டீஸரைப் பார்க்கும்போதே, இது வெற்றிப் படமாக இருக்கும். தரமான படமாக இருக்கும். பார்வையாளனின் பணத்திற்கு மதிப்பு கொடுக்கிற படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு தோன்றும்.  இந்த எதிர்பார்ப்பை அண்மையில் கொடுத்திருக்கிறது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 8 தோட்டாக்கள் திரைப்படம்.

 

8 தோட்டாக்கள்

8 thottakkal

இத் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார் புதுமுக நடிகர் வெற்றி. இவருக்கு ஜோடி மலையாள நடிகை அபர்ணா பால முரளி.

 

நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தாலும், எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு இந்தப் படத்தின் வெற்றிக்கு ஆணிவேராக அமைந்திருப்பதாலும், இதுவரை ஏற்றிருக்காத புதிய பாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்து, தனது நடிப்புத் திறமைக்கு முத்திரை சேர்த்திருப்பதாலும், தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்கிறது திரைப்படத் தயாரிப்புக் குழு.

 

 

“ஒரு காவல் நிலையத்திலிருந்து துப்பாக்கி ஒன்று காணாமல் போகிறது. அத் துப்பாக்கியில் அடைபட்டிருக்கும் எட்டு தோட்டாக்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனிதர்களைக் காவு வாங்குகிறது. இதுதான் 8 தோட்டாக்களின் கதைக் களம்” என்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.

 

பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிற இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஸ்ரீகணேஷ் இயக்கும் முதல் படம் இது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்தப் படம், 2017ம் ஆண்டின் சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்றாக இடம் பெறும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

About The Author

Number of Entries : 49

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top