பாம்புச் சட்டை விமர்சனம் – மதிப்பெண்கள் 42% – paambu sattai review – Reviewed by Momizat on . பணம் எனும் உணவு திடீர்த் தேவையாக வாழ்க்கை எனும் வயிற்றைக் கிள்ளும்போது, பணமில்லாத  ஒருவன், குறுகிய நேரத்திற்குள்  பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந பணம் எனும் உணவு திடீர்த் தேவையாக வாழ்க்கை எனும் வயிற்றைக் கிள்ளும்போது, பணமில்லாத  ஒருவன், குறுகிய நேரத்திற்குள்  பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந Rating: 0
You Are Here: Home » சினிமா » பாம்புச் சட்டை விமர்சனம் – மதிப்பெண்கள் 42% – paambu sattai review –

பாம்புச் சட்டை விமர்சனம் – மதிப்பெண்கள் 42% – paambu sattai review –

பாம்புச் சட்டை விமர்சனம் – மதிப்பெண்கள் 42% – paambu sattai review –

ணம் எனும் உணவு திடீர்த் தேவையாக வாழ்க்கை எனும் வயிற்றைக் கிள்ளும்போது, பணமில்லாத  ஒருவன், குறுகிய நேரத்திற்குள்  பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந்தத்தோடு புத்தி தடம் மாறுவது மனித இயல்பு. இதுதான் ‘பாம்புச் சட்டை’யின் கதைக் கரு. அதாவது, சந்தர்ப்பமும், சூழ்நிலையும் கிடைத்தால், விதியின் கொடிய கரங்கள் நேர்மையாளர்களையும் வீழ்ச்சி நோக்கி அழைத்துச் செல்லத் துடித்துக்கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது ‘பாம்புச் சட்டை’.

நான்காம் வகுப்பு வரை படித்துள்ள பாபி சிம்ஹாவுக்குள் சமூக அக்கறை ஏராளம். தவறே செய்யாமல், நேர்மையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்கிற சிந்தனையோடு வாழ்கிற இளைஞன். காதல் மனம் புரிந்த தன்னுடைய அண்ணன் விபத்தில் இறந்துபோக, கைம்பெண்ணாகிப் போகும் அண்ணியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். ஊரார் கேலி பேசினாலும், தாயைப் போல் பாவித்து வருகிற அண்ணிக்காகவே வாழ்ந்து வரும் பாபி சிம்ஹா, தன் அண்ணிக்கு இரண்டாவது திருமணத்தை நடத்திவிடத் துடிக்கிறார்.  இதற்காக அவர் மேற்கொள்ளும் செயல்களின் தொகுப்பே இந்த ‘பாம்புச் சட்டை’.

அண்ணியின் இரண்டாவது திருமணம், காதலியைக் கரம்பிடித்தாகவேண்டிய சூழல், கூலித் தொழிலாளியாகவே பணிபுரிந்தாகவேண்டிய கல்வியின் நிர்பந்தம் என்கிற கட்டுக்குள் அகப்பட்டு, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே மாட்டிக்கொண்டு முழிக்கிற சாதாரண இளைஞனாக வாழ்ந்து காட்டியிருக்கும் பாபி சிம்ஹாவின் நடிப்புக்கு பாராட்டுகள்.

பாம்புச் சட்டை

பாம்புச் சட்டை

பாபி சிம்ஹா மட்டுமல்ல, அண்ணியாக வரும் பானு, காதலியாக வரும் கீர்த்தி சுரேஷ், துப்புரவுத் தொழிலாளியாக வரும் சார்லி, ஃபைனான்ஷியராக வரும் குரு சோமசுந்தரம், வில்லனாக வரும் கே.ராஜன் என எவருமே நடிப்பில் சோடை போகவில்லை.

முழுக்க முழுக்க எதார்த்தமாக  திரைக்கதை அமைத்து காட்சி படுத்தியிருக்கவேண்டிய இத்  திரைப்படத்திற்கு, 70 சதவீத காட்சிகளை எதார்த்தமாகவும், 30 சதவீத காட்சிகளை சினிமாத்தனமாகவும் திரைக்கதை அமைத்து, சிறப்பான திரைப்படத்தை சுமார் ரக படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். யாரையோ சமாதானப்படுத்தும் நோக்கில், எதார்த்தமான கதைக் களத்தில் ஆங்காங்கே சினிமாத்தனங்களைப் புகுத்தியதால், நிஜத்தில் ‘பாம்புச் சட்டை’யை பார்க்கும்போது எழுகிற பயமும், அதிர்ச்சியும், திரையில் காணும் பார்வையாளர்களுக்கு சரியாகக் கிடைக்கவில்லை.

பின்னணி இசையில் திறமை காட்டிய இசையமைப்பாளர் அஜீஸ், பாடல்களிலும் கவனம் செலுத்தியிருந்தால், ‘பாம்புச் சட்டை’ இன்னும் பேசப்பட்டிருக்கும். ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் தன் பணியைச் செவ்வனே செய்து காட்டியிருக்கிறார்.

அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கையை அப்படியே சினிமாவாக உருவாக்கும்போது, அங்கே கண்டதும் காதல் என்கிற மசாலாத் தனமான சினிமா பாணியை இயக்குநர் ஆடம் தாசன் கையிலெடுக்காமல் இருந்திருந்தால், ‘பாம்புச் சட்டை’யின் மதிப்பு இன்னும் பன் மடங்கு அதிகமாகியிருக்கும். என்றாலும், முதல் படத்திலேயே சமூக அக்கறையோடு படம் எடுத்த இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும். எதிர்வரும் காலங்களில் இவரிடமிருந்து இந்தச் சமூகத்திற்கு இன்னும் தரமான பல திரைப்படங்கள் எந்தவித சமரசமும் இன்றி கிடைக்கும் என்று நம்பலாம்.

மதிப்பெண்கள் 42%

 

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top