படைப்பா? பரிணாமமா? – கூடை நிறைய புன்னகை Reviewed by Momizat on . கூடை நிறைய புன்னகை தயாமலர் படைப்பா? பரிணாமமா? ஐசக் நியூட்டன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான்.. லேட்டஸ்ட்டாக அர்விந்த் கெஜ்ரிவால்.. இவர்களுக்கிடையே ஒரு பெரும் ஒற்றும கூடை நிறைய புன்னகை தயாமலர் படைப்பா? பரிணாமமா? ஐசக் நியூட்டன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான்.. லேட்டஸ்ட்டாக அர்விந்த் கெஜ்ரிவால்.. இவர்களுக்கிடையே ஒரு பெரும் ஒற்றும Rating: 0
You Are Here: Home » கட்டுரைகள் » படைப்பா? பரிணாமமா? – கூடை நிறைய புன்னகை

படைப்பா? பரிணாமமா? – கூடை நிறைய புன்னகை

படைப்பா? பரிணாமமா? – கூடை நிறைய புன்னகை

கூடை நிறைய புன்னகை

தயாமலர்

படைப்பா? பரிணாமமா?

சக் நியூட்டன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான்.. லேட்டஸ்ட்டாக அர்விந்த் கெஜ்ரிவால்.. இவர்களுக்கிடையே ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. தான் என்கிற அகந்தையைத் தாழ்த்தி, எல்லாம் வல்ல தெய்வத்தை உயர்த்துகிற கடவுள் பக்தியில்தான் அப்படியோர் ஒற்றுமை!
இந்திய மீடியா, அரசியல்வாதிகள், பொதுமக்கள் மட்டுமல்லாமல் சர்வதேசங்களும் கெஜ்ரிவாலை உற்றுநோக்கிக் கொண்டிருந்த தருணம் அது! தலைநகரின் புத்தம் புதிய முதல்வராக அவர் வெற்றி பெற்ற முதல் பொதுக்கூட்டம்! அவரது முதல் கன¢ன¤ப¢ பேச்சு!

sparrow

sparrow

arvind kejriwal

arvind kejriwal

அதில்தான், ஆரம்பம் முதல் முடிவுவரை கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் ‘‘இந்த வெற்றி ஒரு அதிசயம்! அற்புதம்! கடவுள் தந்தது! எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி!’’ என்று குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார் அவர்! ‘ஒருகாலத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையாளராக இருந்த கெஜ்ரிவால்.. இன்று தீவிர கடவுள் நம்பிக்கையாளராய்..!’ என்று ஆங்கில தினசரிகள் பெட்டிச் செய்தி போடும் அளவுக்கு இருந்தது அவர் பேச்சு!
‘நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது’ என்ற நம்பிக்கை, எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. ‘பிரபஞ்சம், தானே உருவானது’ என்கிற டார்வின் நம்பிக்கையாளர்கள்கூட, ‘அப்படி அது தானே உருவான முதல் புள்ளி’யைப் பற்றி யோசிக்கையில், சற்றுக் குழம்பித்தான் விடுகிறார்கள். டார்வினுடையது இன்றுவரையிலும் தியரியாகத்தான் (டார்வின்’ஸ் தியரி) இருக்கிறது. நிரூபிக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமாக (டார்வின்’ஸ் லா) இன்னும் அது ஆகவில்லை என்பதும் இந்தக் குழப்பத்தின் முக்கியக் காரணங்களில் ஒன்று!
இந்தக் கட்டுரையின் நோக்கம் க்ரியேஷனா? இவல்யூஷனா? (படைப்பா? பரிணாமமா?) என்பது அல்ல என்பதாலும், இன்றுவரையிலுமே உலகின் முக்கியமான விவாதப் பொருளாக இது இருந்து கொண்டே இருக்கிறது என்பதாலும், இந்த விவகாரத்தை இத்துடன் விட்டு விடுகிறேன்.
‘நாம் உயிருடன் இருக்கிற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் இறைவனை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு நாம் கடமைப்பட்டவர்கள்’ என்கிற ஒற்றை விஷயத்தைத்தான், இந்தப் புதிய வருடத்தில் (ஸாரி, கடந்த இதழில் நான் லீவ்) பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நீங்களும் நானும் இந்த உலகில் எதையோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறோம் என்றால், அதற்கு இறைவன்தான் காரணம். நம் சுவாசம் கடவுளின் கையில் இருக்கிறது. அவர் நினைத்தால், நம்மிடமிருந்து அதை அவரால் எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், ஏதோ ஒரு காரணத்துக்காக விட்டு வைத்திருக்கிறார். அதனால்தான் நாம் உயிருடன் இருக்கிறோம். நாம் உயிருடன் இருப்பதற்காக, கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்!
மேலே வானம், கீழே பூமி, மேகத்தின் மடியில் வீற்றிருந்து கொட்டித் தீர்க்கும் மழை, அருவிகள், நீரோடைகள், மனம் மகிழ்விக்கும் மலைகள், பள்ளத்தாக்குகள், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு குறித்த எல்லைவரை மட்டுமே வந்து கால் நனைத்து விட்டு மீண்டும் கடலுக்குள் ஓடிப் போகும் அலைகள் என இவை எல்லாவற்றிலும் தெரிவது, கடவுளாகிய பரம்பொருளும் அவருடைய விஸ்வரூபமும்தான்! அவ்வப்போது இந்தப் படைப்புகள் கோரதாண்டவம் ஆடுவதும், அப்போதெல்லாம் மனிதனின் கண்டுபிடிப்புகள் செயலற்றுப் போய் விடுவதும், ஆனாலும்கூட, மரணபயம் அற்றுப்ப் போனதுமே மனிதன் அகந்தை கொள்வதும், கடவுள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறார்.
இத்தனை பெரிய கடவுளுக்கு நன்றி சொல்லுவோம்!
கம்யூனிஸ நாடான ரஷ்யாவின் மீது, 2012ம் வருடத்தில் விண்கற்கள் விழுந்தன. அப்போது, எதிர்பார்த்த அளவுக்குப் பெரும் சேதம் ஏற்படாததைக் குறிப்பிட்ட ரஷ்ய அதிபர் புதின், ‘‘கடவுளுக்குத்தான் என் நன்றிகள்’’ என்று சொன்னபோது, உலகமே ஆச்சரியத்துடன் ரஷ்யாவைத் திரும்பிப் பார்த்தது. யெஸ்! கம்யூனிஸ தேசமே கடவுளுக்கு நன்றி சொல்கிறதே! கடவுளின் தேசமான நாம் சொல்லாவிட்டால் எப்படி? நாமும் நன்றி சொல்லுவோம்.
சமீபத்தில் தினசரி ஒன்றில் வாசித்த செய்தி இது! சிட்டுக்குருவிகள் பயிர்களை நாசம் செய்கின்றன என்று சிட்டுக்குருவிகளைக் கொன்று தீர்த்ததாம் சீன அரசு. பிறகு பார்த்தால், சிட்டுக்குருவிகள் இல்லாத தைரியத்தில், பூச்சி புழுக்கள் பெருகிப்போய்விட, அவற்றால் அழிந்த பயிரோடு ஒப்பிடுகையில், சிட்டுக்குருவி அழித்தது ஒன்றுமே இல்லையாம்! இப்போது, கொள்கை முடிவு எடுத்து, சிட்டுக்குருவிகளை வளர்க்கிறது சீன அரசு!
எத்தனை நேர்த்தியான திட்டமிடலுடன், சிருஷ்டி ஒவ்வொன்றுமே ஒன்றுக்கொன்று உதவும்படி, இந்த பூமியை டிஸைன் செய்திருக்கிறார் சிருஷ்டிகர்த்தாவாம் கடவுள்! நன்றி சொல்லுவோம் இறைவனுக்கு!
விஞ்ஞானம் வளர வளர, படைப்பின் அற்புதத்தை அது வியந்துகொண்டேதான் இருக்கிறது. புத்தம் புதிதாக ஒரு நட்சத்திரக் கூட்டம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக, அறிவியலாளர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் இன்னும் எத்தனை அதிசயங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் புத்தம் புதிதாக வைத்து வைத்திருக்கிறாரோ இறைவன்?! நன்றி சொல்லுவோம் அவருக்கு!
அண்ட சராசரத்தை விடுங்கள்… நம் சூரியக் குடும்பத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்! பகலுக்கு சூரியன், இரவுக்கு நிலவு.. ஒழுங்குடன் இயங்கும் கோள்கள்.. சீராகச் சுழலும் பூமிப்பந்து.. வாவ்! எந்த மாயாஜாலத்துடனும் ஒப்பிட முடியாத, தினசரி மாயாஜாமல்லவா இது?! இதைப் படைத்த நிபுணரை நன்றியுடன் நினைப்போம்.
கவிஞர் வைரமுத்து எழுதியதைப் போல, பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்! வண்ணத்துப்பூச்சி உடலில் ஓவியங்கள் அதிசயம்!
நாமும்கூட எழுதலாம்.. கர்ப்பவதியின் வயிற்றுக்குள் உருவாகும் எலும்புகள் அதிசயம்! அருகிலும் அருகாமையிலும் கணப் பொழுதுக்குள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் கண் என்கிற கேமரா அதிசயம்! ஒரு நிமிடத்துக்குள் ஓராயிரம் விஷயங்களுக்குள் பயணித்து விடுகிற மனித மூளை அதிசயம்! ஒன்றுக்கொன்று வேறுபட்டே இருக்கிற விரல்ரேகை அதிசயம்! உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை மட்டும் எடுத்துக் கொண்டாலே, இறைவனின் படைப்பை வியக்க ஒரு ‘சூரியக்கதிர்’ போதாது!
நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லவும் இந்த ஒரு வாழ்நாள் போதாது!

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top