நீங்கள் பென்சிலா? ரப்பரா? – வெற்றியின் விதை! Reviewed by Momizat on . வெற்றியின் விதை! நீங்கள் பென்சிலா? ரப்பரா? பி. சுவாமிநாதன் ஒருவருடைய வெற்றிக்குப் பிரதான காரணம் சம்பந்தப்பட்டவராக மட்டுமே இருக்க முடியும். வேண்டுமானால், இந்த வெ வெற்றியின் விதை! நீங்கள் பென்சிலா? ரப்பரா? பி. சுவாமிநாதன் ஒருவருடைய வெற்றிக்குப் பிரதான காரணம் சம்பந்தப்பட்டவராக மட்டுமே இருக்க முடியும். வேண்டுமானால், இந்த வெ Rating: 0
You Are Here: Home » கட்டுரைகள் » நீங்கள் பென்சிலா? ரப்பரா? – வெற்றியின் விதை!

நீங்கள் பென்சிலா? ரப்பரா? – வெற்றியின் விதை!

நீங்கள் பென்சிலா? ரப்பரா? – வெற்றியின் விதை!

வெற்றியின் விதை!

நீங்கள் பென்சிலா? ரப்பரா?

பி. சுவாமிநாதன்

ருவருடைய வெற்றிக்குப் பிரதான காரணம் சம்பந்தப்பட்டவராக மட்டுமே இருக்க முடியும். வேண்டுமானால், இந்த வெற்றியை அவர் அடைவதற்கு அந்த அன்பரது தாயாரோ, தந்தையாரோ, மனைவியோ, மகன்களோ, மகள்களோ, நண்பர்களோ, உறவினர்களோ, அதிஷ்டமோ உதவி இருக்கக் கூடும். அதன்மூலம் அவர் வெற்றி அடைந்திருக்கலாம்.

வெற்றியின் விதை

வெற்றியின் விதை

ஆனால், அவரது உத்வேகத்தின் மூலமாகவே இந்த வெற்றி என்பதே உண¢மையாகும். உதவி வேறு; உத்வேகம் வேறு. உத்வேகம் பெறுவதற்கு மேலே சொன்ன ஏதேனும் ஒரு உதவி பயன்படலாம். இவை அனைத்தையும் மீறி, ‘விதி’ ஒரு முக்கிய காரணியாக அமையும் என்பதை மறக்கக் கூடாது.
உங்களைப் படைத்த இறைவனே வந்தாலும், தலையெழுத்தை மாற்ற முடியாது. உங்களுக்கு விதிப் பயன் இருந்தால், தலையெழுத்தை லேசாகத் திருத்த முடியும்.
ஒருவர் கோடீஸ்வரராக இருக்கிறாரா? அதற்கு அவர்தான் காரணம். ஒருவர் தெருவில் பிச்சை எடுக்கிறாரா? அதற்கு அவர்தான் காரணம். எனவேதான், ஒருவரது வெற்றிக்கு அவரே காரணம் என்று சொன்னேன்.
எத்தகைய ஒரு நேர்மையான வெற்றிக்கும் உயர்ந்த எண்ணம் வேண்டும். அப்படி உயர்ந்த எண்ணம் ஒருவருக்கு இருந்தால், அது அவரை நல்ல நிலைமைக்கு இட்டுச் சென்று வெற்றிக் கனியைப் பறித்துத் தரும்.
உங்கள் எண்ணங்களை நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள். அவைதான் வார்த்தைகளாக வருகின்றன. உங்கள் வார்த்தைகளை நன்றாகக் கவனியுங்கள். அவைதான் செயல்களாக ஆகின்றன. உங்கள் செயல்களை நன்றாகக் கவனியுங்கள். அவைதான் பழக்கம் ஆகின்றன. உங்கள் பழக்கங்களை நன்றாகக் கவனியுங்கள். அவைதான் உங்களின் நடத்தை ஆகின்றன. உங்கள் நடத்தையை நன்றாகக் கவனியுங்கள். அவைதான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. & இது பலராலும் சொல்லப்படும் ஒரு செய்தி.
ஆக, ஒருவரது எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், அவரது எண்ணம் நன்றாக இருக்க வேண்டும். இதைத்தான் ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்கிறோம்.
ஒரு மனிதனின் வெற்றிக்கு எப்படி பல விஷயங்களைப் பட்டியல் போட்டு இன்றைக்கு முழம் முழமாக கட்டுரை எழுதுகிறோமோ, அதுபோல் ஒரு மனிதனின் தோல்விக்கும் பல விஷயங்களைச் சொல்ல முடியும்.
ஒரு மனிதனின் தோல்விக்குப் பெரும் காரணமாக இருப்பது அவருடைய கோபம். இன்றைக்குக் கோபத்தால் என்னென்ன குழப்பங்கள்? கோபம¢ என¢பது ஒரு வீட்டில் தொடங¢க¤ நாடு வரைக¢கும¢ நடந்து வருகின்றது என்பதை நாம் பல வ¤ஷயங¢கள¤ல¢ பார்த்து வருகிறோம்.
இளம் பிராயத்தில் வருகிற கோபத்தால் நல்ல சிந்தனையை இழந்து விடுகிறோம்.

திருமணத்துக்குப் பின் வருகிற கோபத்தால், சொந்த பந்தத்தை இழந்து விடுகிறோம். கணவன் & மனைவிக்கு இடையே வருகிற கோபத்தால் இல்வாழ்க்கையை இழந்து விடுகிறோம். அலுவலகத்தில் வருகிற கோபத்தால், வேறு வேறு வேலைகளுக்கு அலைக்கழிக்கப்படுகிறோம். மூப்பு பருவத்தில் வருகிற கோபத்தால், பலராலும் உதாசீனப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, ஒரு மனிதனுக்குக் கோபம்தான் முதல் எதிரி. வாழ்வின் எந்த ஒரு பருவத்திலும் அவனால் கோபத்தை விடவே முடியவில்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.

 

கோபம் கொண்டவனுக்கு மூளை சுறுசுறுப்பாக செயல்படாது. கோபத¢த¤ற¢கு ஒருவரது வாழ்க்கையை மட்டுமல்ல. அவரது உடல்நலனையும் பாதிக்கும் தன்மை உண்டு.
‘என்ன, உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வருதே?’ என்று சிலர் கோபக்கார ஆசாமிகளைப் பார்த்துக் கேட்பதைப் பார்த்திருக்கிறோம். மூக்குக்கு மேல் வருகிற கோபம் ரொம்பவும் ஆபத்தானது. மாரடைப்பு போன்ற இதய நோய்களை இத்தகைய கோபம் உண்டாக்கி விடுமாம். அது மட்டுமல்ல. சில வேளைகளில் உயிருக்கே உலை வைத்து விடும்.
விஞ்ஞானம் என்ன சொல்கிறது தெரியுமா?
55 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் கோபப்பட நேர்ந்தால், அவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான வியாதிகளால் உயிரிழப்பதற்கு இயல்பைவிட 3 மடங்கு வாய்ப்பு அதிகமாம். 55 வயதுக்கு மேலே உள்ளவர்கள் கோபப்பட நேர்ந்தால், அது அப்படியே டபுள் மடங்கு ஆபத்தாம். அதாவது, ஆறு மடங்கு.
காசைக் கொடுத்து வியாதியை வாங்குவது என்று சொல்வது இதைத்தான். ‘சிவனே’ என்று இருக்க வேண்டியதை விட்டு விட்டு, ‘சவமே’ என்கிற நிலையை நாம் தேடலாமா?
கோபம் என்பது மாரடைப்பை மட்டுமல்ல. இதயத¢ தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நிலையற்ற நெஞ்சுவலி, மூளையைத் தாக்கும் பக்கவாதம் போன்ற பலவற்றுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.
பயமுறுத்துவதற்காக இதைச் சொல்கிறேன¢ என்றோ, தேவை இல்லாத பீதியை ஏற்படுத்த இதை எழுதுகிறேன் என்றோ தயவுசெய்து நினைத்து விடாதீர்கள். இந்தக் கட்டுரை நம் அனைவருக்கும்தான்.
இன்றைக்கு எங்கு பார்த்தாலும், கோபத்தைக் குறைக்க என்ன செய்வது, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு என்ன பயிற்சி? என்றுதான் எங்கும் வியாபாரம். எதற்குக் கோபப்படுவானேன்? பிறகு, கஷ்டப்பட்டு அதை ஏன¢ குறைப்பானேன்?! இதைத்தான் வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதை என்பார்கள். பொறுமை எனும் குணத்தை நாம் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டால், கோபம் எங்கே வந்து குடியேறும்!
சென்ற இதழில் சொன்னதைப் போல் பெறற்கரிய பேறாக இந்த மனிதப் பிறவியை அடைந்திருக்கிறோம். இந்தப் பிறவியை நல்முறையில் கடந்து போக வேண்டாமா?
‘நீ பென்சிலாக இருக்க விரும்புகிறாயா? ரப்பராக இருக்க விரும்புகிறாயா?’ என்று ஒருவன் தன் நண்பனிடம் கேட்டானாம்.
நண்பன் சொன்னான்: ‘ரப்பராக…’
இந்த நண்பன் ஏன் அப்படிச் சொன்னான் தெரியுமா?
ஒரு முறை ரப்பர் மீது பென்சிலுக்குக் கோபம். தான் கஷ்டப்பட்டு எழுதியதை எல்லாம், திடீர் திடீரென்று ரப்பர் அழித்து விடுகிறதே என்று! ஆனால், ரப்பர் அழிப்பது எல்லாம், தான் தவறாக எழுதியதை என்பது அந்தப¢ பென்சிலுக்குப் புரியாமல் இல்லை.
ஒரு கட்டத்தில் தன் தவறை உணர்ந்து ரப்பரிடம் பென்சில் மன்னிப்பு கேட்டதாம்: ‘நான் எப்போதெல்லாம் தவறு செய்கிறேனோ, அப்போதெல்லாம் சட் சட்டென்று நீ சரி செய்கிறாய். அதனால், ஒவ்வொரு முறையும் நீ தேய்ந்து போகிறாய்… என்னால்தானே உனக்கு அந்த பாதிப்பு ஏற்படுகிறது. என்னை மன்னித்து விடு.’
அதற்கு ரப்பர் சொன்னது: ‘நீ தவறு செய்யும்போது, அதைச¢ சரி செய்வதற்காகவே நான் படைக்கப்பட்டிருக்கிறேன். நான் தேய்ந்து போகிறேனே என்று கவலைப்படாதே. என் பணியை நான் செய்கிறேன். அதில் எனக்குப் பூரண மகிழ்ச்சி. எனக்குத் தெரியும், நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து ஏதேனும் ஒரு நாள் முற்றிலுமாக இல்லாமல் போய் விடுவேன். அதன் பின் உனக்கு ஒரு புதிய ரப்பர் கிடைக்கும். எனக்காக வருத்தப்படாதே.’

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top