நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் – திருநாளைப் போவார் Reviewed by Momizat on . நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் கோபால கிருஷ்ண பாரதியார் சா.கந்தசாமி ‘ஐயே மெத்தக் கடினம் உனக்கடிமை ஐயே மெத்தக் கடினம் பொய்யாத பொன்னம்பலத்தை யாமிருக்குமிடம் நையா நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் கோபால கிருஷ்ண பாரதியார் சா.கந்தசாமி ‘ஐயே மெத்தக் கடினம் உனக்கடிமை ஐயே மெத்தக் கடினம் பொய்யாத பொன்னம்பலத்தை யாமிருக்குமிடம் நையா Rating: 0
You Are Here: Home » கட்டுரைகள் » நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் – திருநாளைப் போவார்

நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் – திருநாளைப் போவார்

நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் – திருநாளைப் போவார்

நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்

கோபால கிருஷ்ண பாரதியார்

சா.கந்தசாமி

‘ஐயே மெத்தக் கடினம் உனக்கடிமை
ஐயே மெத்தக் கடினம்
பொய்யாத பொன்னம்பலத்தை யாமிருக்குமிடம்
நையா மனிதர்க்கு உய்யாது கண்டுகொள்ளும்’
என்ற பாட்டு ‘நந்தனார்’ சினிமாவில் தண்டபாணி தேசிகரால் பாடப்பட்டது. தமிழ் மக்கள் விரும்பிக்கேட்டு மகிழ்ந்த பாடல்களில் ஒன்று ‘ஐயே மெத்தக்கடினம்’ என்பது.  ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் ஆனை தண்டாபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்’ என்ற புத்தகத்தில் இநதப் பாடல் இடம் பெற்று உள்ளது.

நந்தனார்

திருநாளைப் போவார்

nandanaar3 nandanaar 2 sa. kanthasamy
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் கீர்த்தனைகள் ‘சிந்து’ என்ற வடிவத்தில் கதாகால சேபமாக நேடைபெற்றது. அதில் பல குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டிருந்தார்கள். கதாகாலசேபம் என்பது பாட்டும், வசனமுமானது. ஒரு நீண்ட கதையை, நீதி சொல்லும் கதையை, பக்தியின் மேன்மையைச் சொல்லும் கதையை, ஊர் ஊராகச் சென்று பலநாட்களுக்கு சொல்லி வந்தார்கள். மிராசுதார்களும், ஜமீன்தார்களும் பணமும், பொருளும் கொடுத்து அவர்களை ஆதரித்து வந்தார்கள். உ.வே. சாமிநாதையர், நாவலாசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலாகாலசேப குடும்பத்தினர் தான். சிறுவயதில் தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்று கதாகாலசேபம் செய்தது பற்றி தன் சுய சரித்திரத்தில் சாமிநாதையர் எழுதியுள்ளார்.

 
தமிழ்நாட்டில் மிகவும் பிரபல்யமான கதாகாலசேப கதைகளில் முதன்மையானது ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள்’. நந்தனார் பிறப்பால் ஒரு புலையன். அவர் இறைவன் மீது நீங்காத பக்தி கொண்டு வாழ்கிறார். பக்திக்கு சாதி கிடையாது. செய்யும் தொழிலும் முக்கியம் இல்லை. இறைவன் தன் பக்தனைக் கண்டு கொள்வதும், பக்தன் தன் இறைவனிடம் சரண்டைவதும்தான் நந்தனார் கீர்த்தனைகளின் சாராம்சம்.

 

எனவே, நந்தனார் கதையைச் சொல்வதும், அந்தக் கதையைக் கேட்பதும் அன¢றைய கால மக¢கள¤ன¢ பெரு வழக்கமாக இருந்தது. எத்தனையோ சாத¤ வேறுபாடுகளுக்கு இடையில் புலையன் நந்தனார் புனிதராக ஏற்கப்பட்டிருந்தார்.
நந்தனார்க்கு திருநாளைப்போவார் என்ற ஒரு பெயரும் உண்டு. அவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் திருநாளைப் போவார் என்று நந்தனார் பற்றி பாடியுள்ளார். பின்னர், பெரியபுராணத்தில் சேக்கிழார் சற்று விளக்கமாக எழுதியிருக்கிறார். பக்தியின் குறியீடாகச் சொல்லப்படும் நந்தனார் சரித்திரத்தை ஆனை தண்டாபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார், தன் காலத்து மரபு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாடியிருக்கிறார். எளிமை என்பதும், இசையென்பதும் அவர் கீர்த்தனையின் அடிநாதமாக இருக்கிறது. கோபாலகிருஷ்ண பாரதியார் இறை பக்தியை மக¢களுக¢கு எடுத்துச்சொல்ல புலையன் நந்தனார் கதையை தைரியமாக எடுத்துக்கொண்டார்.
அவருக்கு இறைபக்தியின் ஆழம் தெரிந்திருந்தது போல புலையன் நந்தனார் வாழ்க்கையும், வாழ் இடமும் தெரிந்தது. சாதிக்கு குணம் கிடையாது என்பதுதான் கோபால கிருஷ்ண பாரதியாரின் முடிவு.
அடிமை சாசனம¢ கொடுத்துவிட்டு வேதியனிடம் வயல்களில் வேலை செய்து கொண்டிருக்கிறார¢ நந்தனார். அவருக்கு குடும்பம் இருக்கிறதா? தாய் தந்தை இருக்கிறார்களா? மனைவி மக்கள் உண்டா? என¢பது பற¢ற¤ நந்தனாரின் சரித்திரத்தில் எதுவும¢ சொல்லப்படவில்லை. ஆனால், அவர் வாழ்விடம், சுற்றுப்புற சூழல் துல்லியமான விவரங்களுடன் சொல்லப்படுகிறது.
நந்தனார் ஆதனூர்வாசி. இறைவனைத் தவிர வேறு நினைப்பு அவருக்கு இல்லை. ஆனால், ஆதனூர் வாசிகள் அப்படி இல்லை. அவர்கள் நத்தையைத் தின்று, கள் குடித்துக்கொண்டு வாழ்கிறார்கள். கோழிகள¢ மேய¢ந¢துகொண¢டிருக¢கும¢ தெருவில் வாழ்கின்ற புலையர்கள் பதினொரு பேர்களை அழைத்துக்கொண்டு நந்தனார் திருப்ங்கூர் எனற ஊருக்கு இறைவனைப் பார்க்கப் போகிறார். அவர்களுக்கு இறைவனைக் காண என்ன கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை. அவர்கள் ‘வாரிருக்குது தோலிருக்குது வாங்கிக் கொள்வீரே’ என்று கூவிக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள¤ன¢ நெற்றியில் நந¢தனார¢ திருநீறு இட்டார். அவர்கள் எல்லோரும் புலையர்கள் என்பதால் கோவிலுக்குள் செல்லவில்லை. சன்னதியில் நிற்கிறார்கள். சுவாமிக்கு எதிராக பெரிய நந்தி இருக்க¤றது. சுவாமியை மறைத்துக் கொண்டிருக்கும் அந¢த நந்தியைப் பார்த்து, ‘வழி மறைத்திருக்குதே மலை போலே ஒரு மாடு படுத்திருக்குதே’ என்று நந¢தனர்  பாடினார்.

 
ஒரு நாளும் வராத உத்தம பக்தன் தன்னை தரிசிக¢க பதினொரு பேர்களோடு வந்திருப்பதைக் கண்டு இறைவன் நெகிழ்ந்து போனார். ‘சற்றே விலகியிடும் பிள்ளாய் சந்நிதி தானம் மறைக்குதாம்’ என்று நந்தியை விலகி இருக்கச் சொன்னார் இறைவன¢. திருப்பங்கூர் நந்தி விலகியது. நந்தனாரும், மற்றவர்களும் சுவாமியை தரிசித்துவிட்டு ஊர்த் திரும்பி வந்தார்கள். அதில் இருந்து நந்தனார்க்கு தில்லையம் பதிக்குச் சென்று சிவனை தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் வந்துவிட்டது. தன் சேரியில் வசிக்கும் பெரியவர்களை எல்லாம் வணங்கி, ‘நாளை சிதம்பரம் போவேன்’ என்றார். மற்றவர்களையும் அழைத்தார். அதற்கு யாரும் உடன்படவில்லை. தங்களுக்கு இருக்கிற வேலையை எடுத்துச் சொன்னார்கள்.

 

ஆனால், தில்லைக்குச் செல்வதில் நந்தனார் முனைப்பாக இருந்தார். தன் முதலாளி வேதியனிடம் சென்று ‘நாளை தில்லையம்பலம் செல்வேன்’ என்றார். அதனால் கோபம் கொண்ட வேதியன் நந்தனார்க்கு நிறைய வேலை கொடுத்தார். இதைக¢ கவன¤த¢த  கடவுள், நந¢தனாருக¢கு வேத¤யன¢ கொடுத¢த வேலைகளைச¢ செய¢து முடித¢தார¢. அதாவது, ஒரே நாளில் நாற்பது வேலி நிலத்தை உழுது, விதை விதைத்து, அறுப்பறுத்து முடித்தார். வேத¤யனுக¢கு இப¢போதுதான¢ நந¢தனார¤ன¢ பக்தி மகிமை தெரிந்தது. திருநாளைப்போவேன் சென்று சொல்லிக்கொண்டிருந்தவருக்கு அனுமதி கொடுத்தார். கொள்ளிடம் தாண்டி தில்லைக்கு வந்தார். கோபுர தரிசனம் செய்தார். ஆனால், கோவிலுக்குள் செல்ல மனம் வரவில்லை. எனவே, சன்னதி தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தார். தில்லை அம்பல வாணனுக்குத் தன் பரம பக்தன் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பது சங்கடப்படுத்தியது.

 
இறைவன் நந்தனார் கனவில் காட்சி தந்து, ‘நந்தனாரே உம்மிடத்தில் நம்முடைய பக்தர்களாகிய தில்லை வாழ்வேதியர்களை வரச் சொல்கிறோம். அவர்கள் முன் அக்னி பிரவேசமாகி எழுந்து வா’ என்று சொல்லி மறைந்தார். ‘சொப்பனங்கண்டேன், சொப்பனங் கண்டு கொண்டேன்’ என்று நந்தனார் பரவசம் அடைந்தார்.

 
நந்தனார் கனவில் வந்ததுபோல தில்லையம்பதி மூவாயிரவர் கனவில் தோன்றி, தனக்குப் பிரியமான பக்தன் திருநாளைப் போவார் என்றும், அழகிய நாமம் கொண்ட நந்தனார் வெளியில் இருப்பதாகவும், அவரைத் தேடி அழைத்துவரும்படி கூறி மறைந்தார். தில்லை தீட்சிதர்கள் நந்தனாரைத் தேடிக¢ கண்டு பிடித்தார்கள். இறைவன் கூறியபடி அக்னி குண்டம் வளர்த்திருப்பதாகவும் அதில் இறங்கி வரவேண்டுமெனவும் கூறினார்கள். நந்தனார் அதனை மகிழ்ச்சியோடு ஏற்று அக்னி குண்டத்தில் இறங்கினார். சிறிது நேரங்கழித்து ஒரு பிராமண முனியாக பூணூல் உடன் சடை முடியோடு வெளியில் வந்தார்.
‘திருநாளைப் போவாருக்கு ஜெயமங்களம் எங்கள் தில்லை மூவாயிரவர்க்குச் சர்வ மங்களம்’ என்று நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் முடிவடைகிறது. பல ஆண்டுகளுக்கு கோபாலகிருஷ்ண பாரதியார் ஊர் ஊராகச் சென்று கதையைச் சொல்லி வந்தார். அது எழுதப்படவோ, புத்தகமாக அச்சிடப்படவோ இல்லை. காரைக்காலில் அவர் ஒரு முறை நந்தனார் கதையைச் சொன்னார். அப்பொழுது காரைக்கால் பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்தது. பிரஞ்சு அதிகாரி கேட்டார். அவர் தமிழ்மொழி தெரிந்தவர். நந்தனார் சரித்திரத்தைப் படித்து மேலும் அறிந்து கொள்ள புத்தகம் கேட்டார். புத்தகம் போடப்படவில்லை என்றார்கள். பிரஞ்சு அதிகாரியான சீசையா பணம் கொடுத்து புத்தகம் போட சொன்னார். 1848ஆம் ஆண்டில் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் புத்தகமாக வெளிவந்தது.

 
நந்தனார் கதை இயல்பாக யதார்த்தமான முறையில்தான் தொடங்குகிறது. அதன் மொழி இலக்கிய மொழி இல்லை. மக்கள் பேசும்மொழி. விவரிக்கப்படும் வாழ்க்கையும் இலக்கியமான வாழ்க்கை இல்லை. இலட்சிய வாழ்க்கை மக்கள் பேசும் மொழியில், சேரியில் நடப்பதும் நடந்ததும் பற்றி கோபால கிருஷ்ண பாரதியார் நுட்பமான தொனியில் சொல்கிறார். தமிழ் இலக்கியத்தில் அது புதிய வர்ணனை என்« வேண்டும்.
வாழ்க்கைக்கு ஒரு இலட்சியம் இருக்கிறது. அது இறைவன் திருவடியை அடைவதுதான் என்று நந்தனார் கதை மூலமாகச் சொல்கிறார். இறைவனை அடைவது என்ற இலட்சியமே நந்தனாரை தில்லை மூவாயிரவர் மூட்டிய அக்னி குண்டத்தில் இறங்க வைக்கிறது. அது சூதா? அக்னியில் இருந்து உயிர்தப்ப முடியுமா? என்ற கேள்வி எல்லாம் அவருக்கு எழவேயில்லை. இலட்சியந்தான் வாழ்க்கை. அதுவே நந்தனார் சரித்திரம்.
நந்தனார் கீர்த்தனைகள் பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார், தன் காலத்தில் மிகவும் முற்போக்கானவராகவே இருந்தார். அதன் காரணமாகவே அவர் ‘புலையன் நந்தனார் சரித்திரம்’ எழுதினார். அவர் 1811 ஆம் ஆண்டில் நாகைப்பட்டினம் அடுத்துள்ள நரிமணம் என்ற சிற்றூரில் பிறந்தார். இசைக் குடும்பம், கர்நாடகம், இந்துஸ்தானி இசை கற்றார். தமிழகம் முழுவதும் தெலுங்கில் கர்நாடக இசை கோலோச்சிக் கொண்டிருந்த போது, தமிழில் பல விதமான கீர்த்தனைகள் பாடினார். திருமணம் செய்து கொள்ளவில்லை. சனாதனியாக உச்சவிடுத்தி செய்து அதாவது பிச்சை எடுத்து உணவு பொருள்கள் பெற்று உண்டு உயிர்வாழ்ந்தார். சில மாதங்கள் உ.வே.சாமிநாதையர்க்கு இசைப¢ பயிற்சி அளித்தார். அவர் காலத்தில் தமிழ்நாட்டில் தாது வருஷத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களும் கால்நடைகளும் கடுந்துன்பம் அடைந்தன. பஞ்சம் போக்க முன்சிப் வேதநாயகம் பிள்ளை மனிதாபிமான முறையில் அதிகமாகப் பாடுபட்டார். அதனைக் கண்டு மனமுருகி ‘நீயே புருஷமேரு’ என்று ஒரு பாடல் பாடினார். கோபால கிருஷ்ண பாரதியார் மனிதனைப் பற்றி பாடியது அது ஒன்றுதான். காலம் முழுவதும் நந்தனார் கீர்த்தனைகள் சொல்லி வந்த அவர் 1881 ஆம் ஆண்டில் காலமானார்.
புலையன் நந்தனார் பெயர் பரவவும், அவர் பக்தி போற்றப்படவும் கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் தான் முதல் காரணம். நாடக மேடைகளிலும், இசைக் கச்சேரிகளிலும் நந்தனார் கீர்த்தனைகள் பாடப்பட்டு பிரபல்யம் அடைந்தன. 1942 ஆம் ஆண்டில் முத¢துசாம¤ அய¢யர¢ இயக்கத்தில் ‘நந்தனார்’ சினிமா படம் வெளிவந்தது. தண்டபாணி தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் கீர்த்தனைகளைப் பாடி உயிர¢ப்பித்தார்.
நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளும் வசனங்களும் படிக்கக் கூடிய விதமாகவும், கேட்கக் கூடிய விதமாகவும் உள்ளன. அதோடு சொல்லப்பட்ட சரித்திரத்தின் வழியாகச் சொல்லப் படாத சரித்திரத்தையும் சேர்த்து சொல்கிறது என்பதுதான் சிறப்பு அம்சம்.

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top