உயிர் மூச்சு சிறுகதை Reviewed by Momizat on . உயிர் மூச்சு   பி.வி.ஆனந்த்குமார் காலையில் அம்மாவும், தங்கையும் பேசும் சத்தம் கேட்டு கண் விழித்தேன். இருவரும் திவ்யாவைப் பற்றியே பேசினார்கள். அடுத்தவர்கள் உயிர் மூச்சு   பி.வி.ஆனந்த்குமார் காலையில் அம்மாவும், தங்கையும் பேசும் சத்தம் கேட்டு கண் விழித்தேன். இருவரும் திவ்யாவைப் பற்றியே பேசினார்கள். அடுத்தவர்கள் Rating: 0
You Are Here: Home » கதைகள் » உயிர் மூச்சு சிறுகதை

உயிர் மூச்சு சிறுகதை

உயிர் மூச்சு  சிறுகதை

உயிர் மூச்சு

 

பி.வி.ஆனந்த்குமார்

காலையில் அம்மாவும், தங்கையும் பேசும் சத்தம் கேட்டு கண் விழித்தேன். இருவரும் திவ்யாவைப் பற்றியே பேசினார்கள். அடுத்தவர்கள் என்றில்லை, என் வீட்டிலுள்ள யாராவது ஒருவர் திவ்யாவைப் பற்றி பேசினால்கூட, என்னுடைய சந்தோஷம் இரட்டிப்பாகிவிடும்.
திவ்யா படிப்பு முடிந்து சென்னை வந்துள்ளதால், வீட்டில் அனைவரும் திவ்யாவைப் பார்த்துவிட்டு வந்து, அவளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பது என் வீட்டிலுள்ளோர் பேச்சிலிருந்து தெரிகிறது.

உயிர் மூச்சு

உயிர் மூச்சு சிறுகதை

எனக்கும் திவ்யாவை பார்க்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால், போன வருடம் விடுமுறைக்கு திவ்யா சென்னை வந்தபோது, என்னிடம் சண்டையிட்டு, ‘‘உன் முகத்தில் விழிக்க மாட்டேன்’’ என்று சொல்லியிருக்கும் போது, நான் எப்படி அவளைப்போய் பார்ப்பது?
ஒவ்வொரு முறையும் கல்லூரி விடுமுறைக்கு, அவள் அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் எப்படியாவது என்னைப் பார்க்க வருவாள். ஆனால், இந்த முறை என்னைப் பார்க்க வரவில்லை. ஒரு வேளை என் அம்மாவும், தங்கையும் பேசிக்கொண்டிருந்தார்களே, ‘‘திவ்யா பழைய மாதிரி இல்லை, அவ எவ்வளவோ மாறிவிட்டாள்’’ என்று சொன்னது உண்மையாக இருக்குமோ? இல்லை, கண்டிப்பாக திவ்யா என் மேல் வைத்திருக்கும் அன்பு குறைந்திருக்காது.

 
காலிங்பெல் சவுன்ட் கேட்கிறது. கண்டிப்பாக திவ்யாதான் வந்திருப்பாள் என்று நினைத்தேன். ‘ச்சே’ திவ்யாவோட அம்மா மட்டும் வராங்க… திவ்யா என்னை பார்க்க வரலியே!
என்ன திவ்யாயோட அம்மா என் அம்மாவை தனியாக கூட்டிட்டு போய் ஏதோ சொல்லிவிட்டு போறாங்க. திவ்யா அம்மா என்ன சொன்னாங்கன்னு அம்மாகிட்ட எப்படி கேட்பது? அம்மா அழறாங்க. திவ்யாவின் அம்மா என்ன சொல்லியிருப்பாங்க?

 
மறுபடியும் திவ்யாவின் அம்மா நம்ம வீட்டுக்கு வறாங்களே, திவ்யாவும் வர்றா. இப்பதான் என்ன பார்க்க திவ்யாவுக்கு வழி தெரிஞ்சிருக்கு போல. நான் திவ்யாவிடம் பேசமாட்டேன். என்னதான் செய்யறான்னு பார்க்கலாம்.

 
திவ்யா கையில் மாலையோட அழுதுகிட்டே வர்றா.. திவ்யா இப்படி அழுததை நான் பார்த்ததேயில்லையே! திவ்யா அழறத பார்க்க, பார்க்க எனக்கும் அழுகையா வருதே.. திவ்யா மாலையோட என்னோட ரூமுக்கு வர்றா. ஓ… என்னுடைய போட்டோவுக்கு மாலை போடவா? அய்யய்யோ திவ்யா அழறாளே… திவ்யா அழாத, நான் உன் பக்கத்திலதான் இருக்கேன். நான் பேசறது திவ்யாவுக்கு கேட்கலையே. யாராவது திவ்யாவுக்கு ஆறுதல் சொல்லுங்களேன். அழாத திவ்யா நான் பேசறது யாருக்கும் கேட்கலையே?
– –

0
0

Summary:

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top