சமையல் Reviewed by Momizat on . குங்குமப்பூ ஜிலேபி தேவையான பொருட்கள் : மைதா & 1 கப், கடலை மாவு & 1 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளேக் & 1 டேபிள் ஸ்பூன், தயிர், 1/4 கப், மஞ்சள் கலர் & குங்குமப்பூ ஜிலேபி தேவையான பொருட்கள் : மைதா & 1 கப், கடலை மாவு & 1 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளேக் & 1 டேபிள் ஸ்பூன், தயிர், 1/4 கப், மஞ்சள் கலர் & Rating: 0
You Are Here: Home » Uncategorized » சமையல்

சமையல்

குங்குமப்பூ ஜிலேபி

தேவையான பொருட்கள் :
மைதா & 1 கப், கடலை மாவு & 1 டேபிள் ஸ்பூன், கார்ன்ஃப்ளேக் & 1 டேபிள் ஸ்பூன், தயிர், 1/4 கப், மஞ்சள் கலர் & 1 சிட்டிகை, சர்க்கரை & 1 1/2 கப், தண்ணீர் & 3/4 கப், குங்குமப்பூ & 1/2 கிராம், ஏலக்காய்த்தூள் & விருப்பப்பட்டால் & 1/2 டீஸ்பூன்.
பொரிப்பதற்கு : எண்ணெய் & தேவையான அளவு, நெய் & 1/4 கப்.

செய்முறை :
மைதா மாவு, கடலை மாவு, கார்ன்ஃப்ளேக், தயிர், ஆப்ப மாவு சோடா எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தோசைமாவு பதத்தில் தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். சர்க்கரை, தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பிசுக்குப் பதம் வந்ததும் குங்கும்ப்பூ, ஏலக்காய்த் தூவி சேர்த்து இறக்கவும்.

ஏந்தலான கடாயில் எண்ணெய், நெய் இரண்டையும் இதமான தீயில் காய வைக்கவும். ஒரு ப்ளாஸ்டிக் கவரில் ஒரு ஓரத்தில் சிறு துளையிட்டுக் கொள்ளவும். புளித்த மாவை அதனுள் நிரப்பி, மிதமாகக் காயும் எண்ணெயில் சிறுசிறு வட்டங்களாகப் புழிந்து இருபக்கமும் திருப்பி வேகவிட்டு எடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். அடுத்தமுறையும் இதேபோல் பிழியவும். முதலில் பிழிந்தை வெந்ததும் எடுத்து சர்க்கரைப் பாகில் போடும்முன் முதலில் சர்க்கரைப் பாகில் போட்டதை எடுத்து ஒரு தட்டில் அடுக்கிவைத்துவிட்டு இரண்டாவது வெந்ததை எடுக்கவும்.
இதேபோல், மீதமுள்ள மாவையும் எடுக்கவும்.

கார்ன்ஃப்ளேக் மிக்சர்

தேவையான பொருட்கள் :
கடலை மாவு & 2 கப், அரிசி மாவு & 1/2 கப், கார்ன்ஃப்ளேக் & 1 கப், பாதாம் & 50 கிராம், முந்திரி & 50 கிராம், கொப்பரைத் தேங்காய் & 1 மூடி, உடைத்த கடலை & 1/4 கப், கறிவேப்பிலை & சிறிதளவு, மிளகாய்த் தூள் & 2 டீஸ்பூன், சர்க்கரை & பொடித்தது ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் & விருப்பப்பட்டால் & 1 சிட்டிகை, உப்பு & தேவையான அளவு, ஆப்ப சோடா & 1 சிட்டிகை, எண்ணெய் & பொரிப்பதற்கு.

செய்முறை :
1 கப் கடலை மாவை சிறிதளவு உப்பு ஆப்ப சோடா தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் கடாயில் வைத்து பூந்திக் கரண்டியில் சிறிதளவு மாவை எடுத்து எண்ணெய்க்கு நேராக மற்றொரு கரண்டியைப் பிடித்துக் கொண்டு மாவை சிறிதளவு ஊற்றவும். மற்ற கரண்டியில் தட்டிவிட்டால் முத்துக்கள் போல விழும். எண்ணெயில் சலசலப்பு அடங்கி நன்கு வெந்ததும் எடுத்துவிடவும். மீதமுள்ள மாவையும் இதேபோல் செய்யவும்.
இப்போது 1 கப் கடலை மாவுடன் 1/2 கப் அரிசி மாவு சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் அதில் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். ஓமப் பொடியைக் குழலில் காயும் எண்ணெயில் பிழிந்து இருபுறமும் பிதுக்கிவிட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

இதேபோல் மீதமுள்ள மாவையும் செய்யவும். இப்போது அடுத்து பாதாம்பருப்பை நன்கு வறுத்து எடுக்கவும். முந்திரிப் பருப்பை சிவக்காமல் நன்கு வறுத்து எடுக்கவும். காய்ந்த திராட்சையையும் பொரித்து எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கார்ன்ஃப்ளேக்கை சிறிதுசிறிதாகப் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும். கார்ன்ஃப்ளேக் பொரிப்பதற்கு நன்கு காய்ந்திருக்க வேண்டும். எண்ணெயில் சிறிதளவு போட்டாலும் நன்கு பொரிந்து நிறைய அளவு வரும். அதனால், கொஞ்சம்கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும். கடைசியாக கறிவேப்பிலையும் பொரித்து எடுக்கப்பட்ட ஒரு அகலமான பாத்திரத்தில் காராபூந்தி, ஓமப்பொடி, கார்ன்ஃப்ளேக்ஸ், பாதாம், முந்திரி, உடைத்த கடலை, சர்க்கரை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து, காற்று புகாத டப்பாவில் போட்டுக் கொள்ளவும். தேவைப்படும்போது தேவையான அளவு மிக்சர் எடுத்துக் கொள்ளலாம்!

 

ரேவதி சண்முகம்

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top