வீட்டிற்குள்ளேயே மரம் வளர்க்கலாம் Reviewed by Momizat on . வீட்டிற்குள்  மரம் வளர்க்கலாம்! வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று கேள்விப்பட்டிருப்போம். வீட்டிற்குள் ஒரு மரம் வளர்ப்பதுதான் இந்த போன்சாய் வளர்ப்பு முறை. அடர வீட்டிற்குள்  மரம் வளர்க்கலாம்! வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று கேள்விப்பட்டிருப்போம். வீட்டிற்குள் ஒரு மரம் வளர்ப்பதுதான் இந்த போன்சாய் வளர்ப்பு முறை. அடர Rating: 0
You Are Here: Home » கட்டுரைகள் » வீட்டிற்குள்ளேயே மரம் வளர்க்கலாம்

வீட்டிற்குள்ளேயே மரம் வளர்க்கலாம்

வீட்டிற்குள்  மரம் வளர்க்கலாம்!

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று கேள்விப்பட்டிருப்போம். வீட்டிற்குள் ஒரு மரம் வளர்ப்பதுதான் இந்த போன்சாய் வளர்ப்பு முறை.

அடர்ந்த நகரத்தில் மனிதனின் வாழ்விடம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வரும் நிலையில், பசுமைக்கு ஏது இங்கு புகலிடம்?. அது எட்டாக்கனியாகப் போய்விடாது அதனை உயிருடன் பேணிக்காக்க இது ஒரு சிறந்த வழி என்று கூறுகின்றனர் ஆர்வலர்கள்.
எட்டாம் நூற்றாண்டில் சீன, ஜப்பானியர்களின் நாகரிகமாக விளங்கிய போன்சாய் நம் நாட்டிற்குள் புகுந்தது ஒரு சுவாரசியமான கதை. பண்டைய முனிவர்கள் மனிதனின் நோய்களை குணப்படுத்த இலை செடி தழைகளையே மருந்தாக அளித்தனர். ஆனால் நீண்ட தூரப் பயணங்களில் மரங்களை எப்படி தூக்கிக்கொண்டு செல்வது? அப்போது அவர்களுக்கு கை கொடுத்ததுதான் இந்த போன்சாய் வளர்ப்பு. மருத்துவத்திற்காக பயன்பட்ட போன்சாய் முறை, தற்போது ஓவியம் நடனம் போன்றதொரு கலையாக மக்களிடையே பெருகிவருகிறது.

செடிகளைத் தேர்ந்தெடுப்பது :

பொதுவாகப் பெரிய இலைகளை உடைய செடிகளைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கலாம்.
மாமரம், அரசமரம் போன்றவற்றின் வேர் பகுதிகள் அழகான அமைப்பினை உடையது, அத்தகைய வேர் அமைப்பு உள்ள மரங்கள் போன்சாயாக வளர்க்க ஏதுவானது.
-பெரும்பாலும் பூச்செடிகள் அடர்ந்த கிளைகளுக்காக போன்சாயாக வளர்க்கப்படுகிறது. நம்மூர் மல்லிகை, கனகாம்பரம் போன்சாயாக பலரால் வளர்க்கப்படுகிறது.
ஆர்வலர்களால் விரும்பப்படும் போன்சாய்களாக அத்தி மற்றும் போடோகார்பஸ் வகைச் செடிகள் இருக்கின்றன.
சில நேரங்களில் போன்சாய்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் செடிகள் பெரும்பாலும் பழைய கோவில்களில் அல்லது தெருவோரங்களில் கேட்பாரற்று கிடப்பவையே. ஆம்! ஆதரவற்று தனித்து விடப்படுவது மனிதர்கள் மட்டும் அல்லவே, என்கிறார் ஆர்வலர் ஒருவர் புன்னகையோடு.
-விலை கொடுத்து வாங்கப்படும் போன்சாய்கள் பெரும்பாலும் அது என்னவகையான செடி என்பதைப் பொருத்து 50/-லிருந்து 3000/- வரை இருக்கிறது.

வாங்க வளர்க்கலாம் :

-சாதாரணமாக பூந்தொட்டியில் வளரும் ஒரு செடி ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி அடைந்ததும், அச்செடியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் தட்டிவேரை நீக்கிவிடுகின்றனர்.
-தட்டிவேர் நீக்கப்பட்ட செடி அடுத்த முறை இலை துளிர்விடும்போது சிறிய இலைகளாகத் துளிர்விடத் துவங்கும்
-ஆனால் இந்த செடிகள் தரும் பூக்களும் காய்களும் பழங்களும் மட்டும் அதன் அசலான அளவில் கனிந்திருக்கும்.
தட்டிவேர் நீக்கப்பட்ட செடி போன்சாய்கள் பராமரிக்கப்படுவதற்கென்றே இருக்கும் தொட்டிகளில் வளர்க்கப்படுகின்றன .

பொறுத்தால் போன்சாய் வளர்க்கலாம் :

-புதிய தொட்டிகளுக்கு மாற்றப்படும் போன்சாய்கள் அது நேர்த்தியான ஒரு உருவத்தைப் பெறும் வரை, அதன் வேர்களும் இலைகளும் திருத்தப்படுகின்றன.
-செடிகளின் உருவத்தைப் பொருத்தவரை, அதனைப் வளர்ப்பவர் தன மனதில் அதற்கான அழகான உருவம் ஒன்றை வரைந்து கொள்கின்றனர். அதற்கு ஏற்றபடி அந்த செடியும் வளர்க்கப்படுகிறது. ஒரு தாய் தன பிள்ளையை வளர்ப்பது போல.
-இவற்றில் போடோகார்பஸ் போன்ற வகைச் செடிகள் தன முதல் போன்சாய் இலை துளிர்ப்பதற்கு சுமார் ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறது, அதுவரை அந்த செடி உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று கூட அறியமுடியாது என்கின்றனர். இவ்வகைச் செடிகளை வளர்ப்பவர்கள். வாழ்க்கைக்கு பொறுமை ரொம்ப அவசியம் இல்லைங்களா?

எப்படி வளர்க்கலாம் :

சாதாரணமான வளர்ச்சி நிலையில் இச்செடிகளுக்கு வெறும் களிமண் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.
-அது போன்சாயாக மாறும்போது ஆற்றங்கரை மண், கலப்பு உரம், பசுச்சாணம் ஆகியன சமவிகிதத்தில் கலக்கப்பட்டு மண் உரமாக இடவேண்டும்.
-இவ்வகைச் செடிகளுக்கு மண்புழு உரங்களை இடுவதை தவிர்க்க வேண்டுமாம். காரணம், இந்த செடிகளுக்கு தேவையான மண்ணின் அளவு
சிறிதே. மண்புழு உரமிட்டால் புழுக்கள் அந்த மண்ணினை உட்கொள்ள வாய்ப்புகள் அதிகமாம்.
மேலும் உரங்கள் மட்டுமே வளர்ச்சிக்குப் போதாது, மனிதர்களிடம் அன்பு செலுத்துவது போல செடிகளுக்கும் அன்பும், வயதானவர்களிடம் காட்டும் நிதானமும் கனிவையும் சேர்த்து உரமிட்டாலே அழகான போன்சாய் ஒன்று வளர்ச்சி பெறும்!

About The Author

Number of Entries : 53

Leave a Comment

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top